கிருமியழித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருட்களின் (உணவு, திரவ உணவு, மருத்துவ உபகரணங்கள், வேறு பல பொருட்கள்) மேற்பரப்பில் உள்ள அனைத்து வகை நுண்ணங்கிகளையும் அழிக்கும் அனைத்து முறைகளும் கிருமியழித்தல் (sterilization) என அழைக்கப்படும். கிருமியழித்தல் மூலம் பக்டீரியா, பூஞ்சை, புரொட்டிஸ்டுக்கள், வைரசுக்கள் உட்பட அனைத்துக் கிருமிகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன. அதிக வெப்பநிலைக்கு சூடாக்கல், இரசாயனங்களைப் பயன்படுத்தல், அதிக அமுக்கத்தை வழங்கல், கதிர்ப்பைப் (x கதிர்கள், காமா கதிர்கள்) பயன்படுத்தல், நுண் துளைகளூடாக வடிகட்டல் மூலம் கிருமியழித்தலை மேற்கொள்ள முடியும்.

பயன்பாடு[தொகு]

உணவில்[தொகு]

உணவின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க உணவுப் பொருட்கள் கிருமியழிக்கப்படுகின்றன. பொதுவாக உணவுகளைக் கிருமியழிக்க வெப்பமேற்றும் முறையே பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய முறைகள் உணவை உண்பவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும் உணவைக் கிருமியழிப்பதால் உணவின் சுவை குன்றுவதுடன், சில முக்கிய வைட்டமின்கள் அழிகின்றன.

மருத்துவ உபகரணங்களில்[தொகு]

சத்திர சிகிச்சையில் நுண்ணியிர்க் கொல்லிகளை பயன்படுத்தியதில் ஜோசப் லிஸ்டர் முன்னோடியாவார்.

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக்கு முன்னர் சத்திர சிகிச்சை உபகரணங்கள் முழுமையாக கிருமியழிக்கப்படுகின்றன. பழங்கால ரோமில் சத்திர சிகிச்சை உபகரணங்கள் நெருப்பில் வாட்டப்பட்ட பின் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாச்சர்முறை மூலம் சில வகை கிருமிகளை மாத்திரம் கொல்லுதலும் கையாளப்படுகின்றது.

கிருமியழித்தலின் வினைத்திறனை அளவிடல்[தொகு]

இவ்வாய்ப்பாடு முன்னரிலும் ({N_0}) பார்க்க குறிப்பிட்ட நேரத்தில் (t) எத்தனை மடங்கு கிருமிகள் குறைவடைந்துள்ளன (N) என்பதைக் கணிப்பதாகும். இங்கு D எனும் மாறிலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மாறிலி பயன்படுத்தப்படும் கிருமியழித்தல் முறைக்கேற்பவும், நுண்ணுயிரின் வகைக்கேற்பவும் மாறுபடும்.

.

கிருமியழித்தலுக்கு ஆகக்குறைவாக ஒரு மில்லியன் மடங்காவது () நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவடைய வேண்டும். ஊசி மூலம் மருந்தேற்றலுக்கு இவ்வெண்ணிக்கையிலும் பத்து மடங்கு குறைவாக () நுண்ணுயிர்கள் குறைக்கப்பட வேண்டும். தொற்று நீக்கல் செயன்முறைக்கு () போதுமானதாகும். எனினும் முழுமையாக அனைத்து நுண்ணுயிர்களையும் அழித்தல் பொதுவாக சாத்தியமற்றது.

கிருமியழித்தல் முறைகள்[தொகு]

  • வெப்பமேற்றல் (121–134 °C)
  • இரசாயனங்களைப் பயன்படுத்தல்
  • கதிர்த்தொழிற்பாடு
  • வடிகட்டல்
  • அதிக அமுக்கம் வழங்கல்
  • மேலுள்ள முறைகளைக் கலவையாகப் பயன்படுத்தல்

கிருமியழித்தல் எனத் தவறாகக் கருதப்படும் செயன்முறைகள்[தொகு]

  • கழுவுதல்- பொதுவாக நீரில் அல்லது சூடான நீரில் கழுவுவதாலோ அல்லது சமையல் பாத்திர சுத்தப்படுத்தானைப் பயன்படுத்துவதாலோ அனைத்துக் கிருமிகளையும் அழிக்க முடியாது.
  • குளிப்பதால் அனைத்துக் கிருமிகளையும் அழிக்க முடியாது. கிருமியழிப்பு சோப்புகளால் சிறிதளவான நுண்ணுயிர்களையே அழிக்க முடியும்.
  • நுண்ணுயிர்க்கொல்லிகளால் அனேகமான நுண்ணியிர்களை அழிக்க முடியுமென்றாலும், இவையும் முழுமையற்றவையே. எனவே இவற்றைப் பயன்படுத்தல் கிருமியழித்தல் ஆகாது.
  • பாச்சர்முறை மூலம் நோயேற்படுத்தும் சில பக்டீரியாக்களே அழிக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருமியழித்தல்&oldid=2746282" இலிருந்து மீள்விக்கப்பட்டது