கிரியாட்டினைன்
வார்ப்புரு:Chembox LogPவார்ப்புரு:Chembox IsoelectricPt
| கிரியாட்டினைன் | |
|---|---|
|
2-Amino-1-methyl-1H-imidazol-4-ol[சான்று தேவை] |
|
|
பிற பெயர்கள்
2-Amino-1-methylimidazol-4-ol[சான்று தேவை] |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| EC number | |
| en:KEGG | D03600 |
| ம.பா.த | Creatinine |
| ChEBI | CHEBI:16737 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| Beilstein Reference | 112061 |
| 3DMet | B00175 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | C4N3H7O |
| மோலார் நிறை | 113.1179 g mol-1 |
| தோற்றம் | White crystals |
| அடர்த்தி | 1.09 g cm-3 |
| காடித்தன்மை எண் (pKa) | 12.309 |
| காரத்தன்மை எண் (pKb) | 1.688 |
| தீநிகழ்தகவு | |
| EU classification | வார்ப்புரு:Hazchem Xn |
| NFPA 704 |
|
| R-phrases | R34, வார்ப்புரு:R36/37/38, வார்ப்புரு:R20/21/22 |
| S-phrases | S26, S36/37/39, S45, S24/25, S36 |
| தீபற்றும் வெப்பநிலை | 290 °C |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
கிரியாட்டினைன் (Creatinine cre·at·i·nine) (சதை எனப்பொருள்படும் கிரேக்க மொழிச் சொல் κρέας இருந்து பெறப்பட்டது) தசைகளில் கிரியாட்டைன் பாசுபேட் உடைக்கப்படும் போது உருவாகும் பொருளாகும். உடலில் தசைநார்களின் திண்மையைப் பொறுத்தும் அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்தும் சீரான வீதத்தில் இது உடலில் உருவாக்கப்படுகிறது. 295 °C வெப்பத்திற்கு மேல் இது உருக்குலையத் துவங்குகிறது.
வேதியியலின்படி கிரியாட்டினைன் கிரியாட்டினின் தானாக உருவான வழிப்பொருளாகும். இதனை சிறுநீரகங்கள் வழியே பிரித்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட கிரியாட்டினைன் மீண்டும் உடலில் உட்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் சிறுநீரகச் செயலிழப்பு|சிறுநீரகம் செயலிழக்கும்போது வடிகட்டும் திறன் குறைந்து குருதியில் கிரியாட்டினைன் அளவு கூடுகிறது. எனவே ஒருவரது குருதியிலும் சிறுநீரிலும் உள்ள கிரியாட்டினைன் அளவைக் கொண்டு குளோமரூலர் வடிகட்டல் வீதம் (GFR) தொடர்புள்ள கிரியாட்டினைன் பிரிப்பு (CrCl) மதிப்பிடப்படுகிறது.
நிறுநீரகச் செயலிழப்பு தன்மையை அளவிட சிறுநீர்க்குழல் வடிகட்டல் வீதம் (GFR) மருத்துவச்சோதனைகளில் முதன்மையாக விளங்குகிறது. இருப்பினும் சிறுநீரகம் மிகவும் மோசமடைந்த நிலையில் சிறுநீர்க்குழல்களில் சுரக்கும் கிரியாட்டினைனால் கிரியாட்டினைன் பிரிப்பு வீதம் "மிகையாக மதிப்பிட"ப்படக் கூடும். கீடோ அமிலங்கள், சிமேடைடின் மற்றும் டிரைமெதோபிரிம் போன்ற வேதிப்பொருட்கள் இக்குழல்களில் கிரியாட்டினைன் சுரத்தலை குறைப்பதால் இத்தகைய நோயாளிகளுக்கு சரியாக வடிகட்டல் வீதத்தை அளவிட உதவுகிறது.
சிறுநீரகச் செயலிழப்பினை இன்னும் முழுமையாக குருதியில் கிரியாட்டினைனின் அளவும் யூரியாவின் அளவும் உள்ள விகிதத்தைக் கொண்டு மதிப்பிட முடியும். குருதி யூரியா நைத்தரசன்- கிரியாட்டினைன் விகிதம் கொண்டு சிறுநீரகக் கோளாறுகளைத் தவிர அதற்கு வழிகோலும் நிலைமைகளையும் அறிய முடியும். காட்டாக யூரியாவின் அளவு கிரியாட்டினைனதை விடக் கூடுதலாக இருந்தால் சிறுநீரச் செயலிழப்பு நேர்வதற்கு முன்பான நீர்மக் குறைவின் அடையாளமாக் கொள்ளலாம்.
பெண்களைவிட ஆண்களுக்கு உடலியல்படி கூடுதலான தசைத்திண்மை உள்ளதால் குருதியில் கிரியாட்டினைன் அளவு கூடுதலாகக் காணப்படும். சைவ உணவு உட்கொள்வோருக்கு கிரியாட்டினைன் அளவு பொதுவாக குறைந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. [1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Delanghe J; De Slypere JP, De Buyzere M, Robbrecht J, Wieme R, Vermeulen A (Aug 1989). "Normal reference values for creatine, creatinine, and carnitine are lower in vegetarians" (PDF). Clin. Chem. 35 (8): 1802–3. பப்மெட் 2758659. http://www.clinchem.org/cgi/reprint/35/8/1802.pdf. Retrieved 2009-03-01. "As shown, measured serum and erythrocyte creatine content, and estimated muscle creatine content, are lower in vegetarians than in the reference population".