கிராம்-நேர் நுண்ணுயிரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளர் நுண்ணுயிரிகளை (பாக்டீரியா) வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய முறை கிராம் கறையிடுதல் என அழைக்கபடுகின்றது.
கிராம்-நேர் வகை நுண்ணுயிரி [தொகு]
கிராம் கறையிடுதல் முறையில் ஊதா நிறத்தைப் பெறும் நுண்ணுயிரி கிராம்-நேர் வகை. இவை முதன்மைச் சாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளக் காரணம் இவற்றின் செல்சுவரில் உள்ள பெப்டிடோ கிளைக்கன்களே ஆகும். எ.கா: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (சங்கிலிக்கோளம்), ஸ்டஃபைலோகாக்கஸ் (கொத்துக்கோளம்)
கிராம்-எதிர் வகை நுண்ணுயிரி [தொகு]
கிராம் கறையிடுதல் முறையில் முதன்மைச் சாயத்தை இழந்து இரண்டாவது நிறத்தைப் பெறும் நுண்ணுயிரி கிராம்-எதிர் வகை. இவை நிறநீக்கியான அசிட்டோன் முதலியவற்றால் முதன்மைச் சாயத்தை இழந்து விடுகின்றன. இதற்குக் காரணம் இவற்றின் செல் சுவரில் அதிக அளவு கொழுப்பு இருப்பதே ஆகும்.