கிரஹாம் ஹான்கோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிரஹாம் ஹான்கோக் (Graham Hancock) (பிறப்பு 1951) பிரித்தானியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ஆவார். இவரது நூல்களான Lords of Poverty, The Sign and the Seal, Fingerprints of the Gods, Keeper of Genesis , The Mars Mystery, Heaven's Mirror (with wife Santha Faiia), Underworld: The Mysterious Origins of Civilization, and Talisman: Sacred Cities, Secret Faith (with co-author Robert Bauval) விற்பனையில் சாதனை படைத்த நூற்படைப்புகளாகும்.சான்ல 4 என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட Underworld: Flooded Kingdoms of the Ice Age என்ற விபரணப்படத்தினை எழுதி வழங்கியவரும் ஹான்கோக் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது அண்மைய படைப்புகளான, Supernatural: Meetings With the Ancient Teachers of Mankind, பிரித்தானியாவில் அக்டோபர் 2005 ஆம் ஆண்டளவில் வெளியிடப்பட்டது அமெரிக்காவில் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்படும்.

ஹான்கோக் தனது படைப்புகளின் பெரும்பாலும் பண்டைக்கால மர்மங்கள்,புராணக் கதைகள்,வானியல் போன்றவற்றின் பின்னணியில் அமையப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இவரின் கூற்றுப்படி இன்றை கண்டுபிடிப்புகளான நாகரீகங்கள் அனைத்திற்கும் முதலில் ஒரு நாகரீக அமைப்பு இவ்வுலகில் அமைந்திருத்தல் வேண்டுமெனவும் மேலும் தனது பல ஆராய்வுகளின் பின்னர் கண்டுபிடித்த 10,500 கி.மு ஆண்டில் பூமியில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருத்தல் வேண்டுமெனவும் இவர் தெரிவிக்கும் அதே வேளை ஆராய்ச்சியாளர்கள் பலர் இவரது கண்டுபிடிப்பான 10,500 கி.மு நம்பகத்தன்மை இல்லையென்பதனையும் உணர்த்துயுள்ளனர் மேலும் எது எவ்வாறிருப்பினும் இவ்வாண்டைக் குறிக்கும் படி எகிப்திய பிரெமிட்டுக்களும்,கம்போடியாவில் அமையப்பெற்றுள்ள கோயில்களும் வானில் உள்ள நட்சத்திர அமைப்புகளிற்கேற்றவாறு அமைக்கப்பெற்றுள்ளது என இவர் கூறுகின்றார் அதேசமயம் இவ்வாறு அமையப்பெற்றுள்ள நட்சத்திரக் குடும்ப அமைப்புகளினை ஆராயும் பொழுது அவை அனைத்தும் கி.மு 10,500 ஆண்டினையே அடையாளம் காட்டுகின்றன.அதனால் இவர் மனித நாகரீகங்கள் கடவுள் போன்ற சக்தியினைக் கொண்டவர்களால் உருவாக்கம்பெற்றிருக்கலாம் எனவும் கூறுகின்றார்.இவரது நூல் வெளியீடு 5 மில்லியன் வரை விற்பனையில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை[தொகு]

எடின்போரோ பகுதியில் பிறந்த ஹான்கோக் தனது சிறுவயது முதல் இந்தியாவில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட தனது தந்தையுடன் வாழ்ந்தார்.டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் 1973 ஆம் ஆண்டு சமூகவியலில் முதன்மைப் பட்டம் பெற்றார் ஹான்கோக்.பத்திரிகையாளராக த டைம்ஸ்,த சண்டே டைம்ஸ்,த இண்டிபெண்டண்ட் மற்றும் த கார்டியன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார் ஹான்கோக்.மேலும் நியூ இண்டெர்னேஷனலிஸ்ட் இதழில் 1976 முதல் 1979 வரையிலும் த எக்கோனோமிஸ்ட் பத்திரிகையின் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் கிளையில் 1981 முதல் 1983 வரையிலும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹாம்_ஹான்கோக்&oldid=1345138" இருந்து மீள்விக்கப்பட்டது