கிரண் பேடி
| கிரண் பேடி | |
|---|---|
| பிறப்பு | சூன் 9, 1949 அம்ருதசரசு, பஞ்சாப் |
| இருப்பிடம் | |
| தேசியம் | |
| பணி | சமூக சேவகி, ஐ.பி.எஸ் அதிகாரி (1972-2007) |
| விருதுகள் | 1994 ரமன் மக்சேசே விருது |
| இணையதளம் | |
| http://www.kiranbedi.com/ | |
கிரண் பேடி (Kiran Bedi) (9 சூன், 1949) இந்தியாவின் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி யாவார். 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு[1] பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர்.தமது 22ஆம் வயதில் (1971) ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவருமாவார். 1993-1995 ஆண்டுகளில் தில்லியின் சிறைத்துறை பொது ஆய்வாளராக இருந்தபோது, 10,000 கைதிகளை வைத்திருக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் திகார் சிறை[2] யில் அவராற்றிய சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி[3] 1994ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ரமன் மக்சேசே விருது பெற ஏதுவாய் இருந்தது.
அவர் இரு அரசுசாரா அமைப்புகள்: நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும்[4] சிறை சீர்திருத்தங்கள்,போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பௌண்டேசன் என்ற அமைப்பையும் [5] நிறுவியுள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ CNN-IBN, Kiran Bedi quits police force, takes voluntary retirement
- ↑ Official website Tihar Prisons Abou us at tiharprisons.nic.in.
- ↑ About us indiavisionfoundation.
- ↑ India Vision Foundation Official website