கிண்ணியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிண்ணியா கின்னி |
|
|---|---|
| அமைவு: | |
| Country | Sri Lanka |
| Province | Eastern |
| District | Trincomalee |
| DS Division | Kinniya |
கிண்ணியா இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். மாவட்டத்தின் பிரதான நகரமான திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து சுமார் 20 கி.மி தூரத்திலும் இலங்கையின் தலைநகரம் கொழும்பில் இருந்து சுமார் 240 கி.மி தொலைவிலும் இந்த நகரம் அமையப் பெற்றுள்ளது.
நகரத்தின் 35,000 சனத் தொகையில் பெரும்பாண்மையினராக முஸ்லீம் இனத்தவரும் குறைந்தளவில் தமிழர்களும், சிங்களவரும் வசித்து வருகின்றனர். இலங்கையின் அதிக நீளமான மேம் பாலம் இந்த நகரத்திலேயே அமைந்துள்ளது. இந்தப் பாலத்தைப் பார்வையிடுவதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத் தக்கவேண்டிய ஒரு விடையம்.