காளையார்கோயில்
| காளையார்கோயில் | |
| — கிராமம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சிவகங்கை |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | V. ராஜாராமன் [3] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
காளையார்கோயில் (ஆங்கிலம்:KalayarKovil) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், காளையார்கோயில ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்.[4][5]
பொருளடக்கம் |
இவ்வூரின் சிறப்பு [தொகு]
இங்கு காளீஸ்வரர்கோயில் எனும் பிரபலமான இந்து சிவன் கோவில் உள்ளது.
திருக்கானப்பேரூர் [6]காளையார்கோவில், சோமநாதமங்கலம் (மறுபெயர்) சம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இறைவன் காளை வடிவங்கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும்கொண்டு சுந்தரருக்குக்காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை.
கோயிலின் இரட்டைகோபுரம்,தெப்பக்குளம்,வேதாந்தமடம்,பாண்டியன்கோட்டை மற்றும் மருதுபாண்டியர் சமாதி இவ்வூரின் சிறப்பாகும்.
அமைவிடம் [தொகு]
மதுரை-தொண்டி சாலையில் சிவகங்கையிலிருந்து கிழக்கே 18 கி.மீ
காரைக்குடி-பரமக்குடி சாலையில் கல்லலிருந்து தெற்கே 10 கி.மீ
![]() |
திருப்பத்தூர் (சிவகங்கை) | திருச்சி காரைக்குடி |
தேவகோட்டை | ![]() |
| மதுரை சிவகங்கை | திருவாடானை தொண்டி | |||
| மானாமதுரை | இளையான்குடி பரமக்குடி |
இராமநாதபுரம் |
அஞ்சலகம் [தொகு]
காளையார்கோயில் :623551
பொருளாதாரம் [தொகு]
விவசாயம் பிரதான தொழில், நெல்,நிலக்கடலை இங்கு விளையும் முக்கிய பயிர்கள். கடலை உடைப்பு ஆலைகள், காளீஸ்வரர் நூற்பாலை( தேசிய பஞ்சாலை கழகம் ) ஆகியன இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23¢code=0004&tlkname=Sivaganga%20%20332304
- ↑ http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=23&tlkname=Kalayarkoil®ion=2&lvl=block&size=1200
- ↑ சோமநாதமங்கலம்

