காளிகாட் காளி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காளிகாட் காளி கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காளிகாட் காளி கோயில்
காளிகாட்டில் காளியின் சிலை
காளியின் சிலை
பெயர்
பெயர்: காளிகாட் காளி கோயில்
தேவநாகரி: काळिघाट् काळि मन्दिर्
தமிழ்: காளிகாட் காளி கோவில்
வங்காளம்: কালীঘাট কালী মন্দির
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: மேற்கு வங்காளம்
அமைவு: கல்கத்தா, ஆதி கங்கை ஆற்றங்கரையில்
கோயில் தகவல்கள்
மூலவர்: காளி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: வங்கக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: 1809 (தற்போதைய அமைப்பு)

காளிகாட் காளி கோயில் (Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். இக்கோவிலின் காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர்.[1]

வரலாறு[தொகு]

1887 ஆம் ஆண்டில் காளிகட் கோயில்

தற்போதைய கோயிலமைப்பு 200 ஆண்டு பழைமையானதாக இருந்த போதிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு இலக்கியப்பதிவுகளிலும் உள்ளது. பழைமையான முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது, இத்திருத்தலத்தின் பழைமைக்குச் சான்றாக உள்ளது.

சிறு குடிசையாக இருந்த திருக்கோயில் சிறு கோயிலாக மானசிங் அரசரால் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் கட்டப்பட்டது. பின்னர் சபர்ணா ராய் சௌத்ரி குடும்பத்தினர் முன்னிற்று தற்போதைய கோயிலமைப்பை 1806 ஆம் ஆண்டில் கட்டினர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காளிகாட்_காளி_கோயில்&oldid=1772915" இருந்து மீள்விக்கப்பட்டது