காற்றுத் திறன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காற்று ஆற்றல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அயர்வு உண்டாக்கும் விசைகளைக் குறைக்கும் காரணத்தால் பரலவாகப் பயன்படும் மூவலகு காற்றுச் சுழலி
| புதுப்பிக்கத்தக்க ஆற்றல் |
|---|
| உயிரி எரிபொருள் உயிர்த்திரள் புவிவெப்பம் நீர்மின்சாரம் சூரிய ஆற்றல் நீர்ப்பெருக்கு ஆற்றல் அலை ஆற்றல் காற்றுத் திறன் |
காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்தி காற்றின் ஆற்றலை மின்சாரம் போன்ற பயனுள்ள வடிவங்களுக்கு மாற்றுவதை காற்றுத் திறன் என்கிறோம். 2007 முடிவில், உலகெங்கும் உள்ள காற்றில் இயங்கும் மின்னாக்கிகள் 94.1 கிகாவாட் உற்பத்தித் திறன் கொண்டிருந்தன [1]. உலகின் மின் தேவைகளில் 1% அளவே தற்போது காற்றின் வழி பெறுகிறோம் என்றாலும் [2], டென்மார்க்கில் 19%, எசுப்பானியா, போர்த்துகலில் 9% , செருமனி, அயர்லாந்தில் 6% என்ற அளவில் காற்றுத் திறன் உள்நாட்டு மின்தேவைகளை நிறைவு செய்கிறது (2007 தரவு). உலக அளவில், 2000 முதல் 2007க்குள் காற்றுத் திறன் உற்பத்தி ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
உசாத்துணை [தொகு]
- ↑ Global Wind Energy Council News.
- ↑ http://www.wwindea.org/home/images/stories/pr_statistics2007_210208_red.pdf World Wind Energy Association press release retrieved 2008 03 18