காற்றுத் திறன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அயர்வு உண்டாக்கும் விசைகளைக் குறைக்கும் காரணத்தால் பரலவாகப் பயன்படும் மூவலகு காற்றுச் சுழலி
காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்தி காற்றின் ஆற்றலை மின்சாரம் போன்ற பயனுள்ள வடிவங்களுக்கு மாற்றுவதை காற்றுத் திறன் என்கிறோம். 2007 முடிவில், உலகெங்கும் உள்ள காற்றில் இயங்கும் மின்னாக்கிகள் 94.1 கிகாவாட் உற்பத்தித் திறன் கொண்டிருந்தன [1]. உலகின் மின் தேவைகளில் 1% அளவே தற்போது காற்றின் வழி பெறுகிறோம் என்றாலும் [2], டென்மார்க்கில் 19%, எசுப்பானியா, போர்த்துகலில் 9% , செருமனி, அயர்லாந்தில் 6% என்ற அளவில் காற்றுத் திறன் உள்நாட்டு மின்தேவைகளை நிறைவு செய்கிறது (2007 தரவு). உலக அளவில், 2000 முதல் 2007க்குள் காற்றுத் திறன் உற்பத்தி ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
[தொகு] உசாத்துணை
- ↑ Global Wind Energy Council News.
- ↑ http://www.wwindea.org/home/images/stories/pr_statistics2007_210208_red.pdf World Wind Energy Association press release retrieved 2008 03 18