கார்ல் பேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்ல் பேயர் (Carl Josef Bayer, 1847 –1904): ஆஸ்திரிய வேதியலாளர். அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறையான பேயர் முறையைக் கண்டறிந்தவர்.[1] பேயர் 1887-ல் உருசியாவில் உள்ல செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது, காரக் கரைசலின் வழியே வீழ்படிவாக்கப்பட்ட அலுமினியம் ஹைடிராக்சைடு, நன்கு படிக நிலையில் கிடைக்கப் பெறுவதால், அதனை எளிதில் வடிகட்டி, கழுவித் தூய்மைப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார். அமில முன்னிலையில் வீழ்படிவாக்கப்பட்ட அலுமினியம் ஹைட்ராக்சைடு கூழ் போன்று கிடைக்கப்பெறுவதால் தூய்மையாக்குவது கடினமாக இருந்தது. இதனை பேயர் முறை மூலம் எளிதில் பிரிக்கலாம். 1855- களில் பிரான்சில் மிக கிடைத்தற்கரிய உலோகமாக அலுமினியம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.[2] இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஹால்-ஹெரௌல்டு முறையை விட பேயர் முறையில் அலுமினியம் பிரித்தெடுக்கப்படுவது எளிமையாக இருந்ததால் அதனுடைய விலை 1854-ல் இருந்ததை விட 1890-களில் 80 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆர். வேங்கடராமன், முழுமை அறிவியல் உலகம்', பக். 3611
  2. http://www.bookrags.com/sciences/earthscience/aluminum-woes-01.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-09-29. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_பேயர்&oldid=3549245" இலிருந்து மீள்விக்கப்பட்டது