கார்னிதின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்னிதின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
3-ஹைட்ராக்சி-4-(டிரைமீதைல் அசானியுமைல்)பியூட்டனோயேட்
மருத்துவத் தரவு
கர்ப்பகால மதிப்பீட்டு வகை  ?
சட்டத் தகுதிநிலை  ?
வழிகள் வாய்வழி மற்றும் சிரைவழி
மருந்தியக்கத் தரவு
உயிரகக் கிடைப்புத் தன்மை < 10%
புரத இணைப்பு எதுவுமில்லை
வளர்சிதைமாற்றம் சிறிதளவு
கழிவகற்றல் சிறுநீர் (> 95%)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 541-15-1
ATC குறியீடு A16AA01
பப்கெம் CID 288
DrugBank APRD01070
ChemSpider 282 Yes check.svgY
UNII 0G389FZZ9M Yes check.svgY
KEGG C00318 Yes check.svgY
ChEMBL CHEMBL172513 Yes check.svgY
வேதியியல் தரவு
சூத்திரம் C7

H15 N O3  

மூலக்கூற்றுத்திணிவு 161.199 கி/மோல்
SMILES eMolecules & PubChem

கார்னிதின் (Carnitine) என்னும் நான்கிணைய அமோனியாச் சேர்மம் லைசின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்களிலிருந்து உயிரியல் முறையில் தொகுக்கப்படுகின்றது.[1] கார்னிதின், உயிரணுக்களில் கொழுப்பைச் சிதைத்துப் பெறப்படும் வளர்சிதை மாற்ற (அ) உடல் இயக்க எரிசக்தி உருவாக்கத்திற்கு கொழுப்பு அமிலங்களை உயிரணுக்கணிகத்திலிருந்து மணியிழையத்திற்கு எடுத்துச் செல்லத் தேவைப்படுகிறது. இது, உணவுச் சேர்ப்பாக விற்பனைச் செய்யப்படுகின்றது. முதன்முதலில், கார்னிதின் புழு உணவில் வளர் காரணியாகக் கண்டறியப்பட்டது. கார்னிதின் உயிர்ச்சத்தாகவும் (விட்டமின் Bt) அழைக்கப்படுகின்றது. கார்னிதின் இரு முப்பரிமாண மாற்றியங்களைக் கொண்டுள்ளது. L-கார்னிதின் உயிரிச் செயற்படு வடிவத்தில் உள்ளது. ஆனால், இதன் ஆடி மாற்றியன், D-கார்னிதின் உயிரிச் செயல்படா வடிவத்தில் உள்ளது.[2]

பொருளடக்கம்

[தொகு] உயிரிவேதியியல்

[தொகு] உயிரித்தொகுப்பு

விலங்குகளில், கார்னிதின் முதன்மையாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் லைசின் மற்றிம் மெத்தியோனின் அமினோ அமிலங்களிலிருந்து உயிரியல் முறையில் தொகுக்கப்படுகிறது.[3] கார்னிதின் தொகுப்பிற்கு விட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) இன்றியமையாதது. மனித வளர்ச்சியின் போதும்[4], கர்ப்பக் காலத்திலும்[5] கார்னிதின் இயற்கையில் தயாரிக்கப்படுவதைவிட அதிகமாக அளவில் தேவைப்படுகிறது.

[தொகு] கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் கார்னிதினின் பங்கு

Click to enlarge

[தொகு] உணவு மூலங்கள்

பொருள் அளவு கார்னிதின்
மாட்டிறைச்சித் துண்டம் 100 கி 95 மிகி
அரைக்கப்பட்ட மாட்டிறைச்சி 100 கி 94 மிகி
பன்றி இறைச்சி 100 கி 27.7 மிகி
பன்றி இறைச்சி (பேக்கன்) 100 கி 23.3 மிகி
சோயா உணவு 100 கி 19.5 மிகி
மீன் 100 கி  5.6 மிகி
கோழிக்கறி 100 கி  3.9 மிகி
அமெரிக்கப் பாலாடைக் கட்டி 100 கி  3.7 மிகி
பனிக்குழைமம் (ஐஸ் கிரீம்) 100 மிலி  3.7 மிகி
நிறைபால் 100 மிலி  3.3 மிகி
வெண்ணைப் பழம் நடுத்தர அளவு 2 மிகி[6]
பாலாடைக்கட்டி 100 கி  1.1 மிகி
முழு கோதுமை ரொட்டி 100 கி  0.36 மிகி
தண்ணீர்விட்டான் கொடி 100 கி  0.195 மிகி
மைதா ரொட்டி 100 கி  0.147 மிகி
கோதுமைவகை உணவுப்பொருள் 100 கி  0.126 மிகி
நிலக்கடலை வெண்ணெய் 100 கி  0.083 மிகி
சாதம் 100 கி  0.0449 மிகி
முட்டை 100 கி  0.0121 மிகி
ஆரஞ்சுச் சாறு 100 மிலி  0.0019 மிகி

[தொகு] மேற்கோள்கள்

  1. Steiber A, Kerner J, Hoppel C (2004). "Carnitine: a nutritional, biosynthetic, and functional perspective". Mol. Aspects Med. 25 (5-6): 455–73. doi:10.1016/j.mam.2004.06.006. PMID 15363636. 
  2. A. J. Liedtke, S. H. Nellis, L. F. Whitesell and C. Q. Mahar (1 November 1982). "Metabolic and mechanical effects using L- and D-carnitine in working swine hearts". Heart and Circulatory Physiology 243 (5): H691–H697. PMID 7137362. http://ajpheart.physiology.org/cgi/content/abstract/243/5/H691. 
  3. "L-Carnitine". மூல முகவரியிலிருந்து 2007-05-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-06-01.
  4. Cederblad, G; Niklasson, A; Rydgren, B; Albertsson-Wikland, K; Olegård, R; “Carnitine in Maternal and Neonatal Plasma”; Acta Pædiatrica; Published Online: 21 Jan 2008; Volume 74, Issue 4: Pp 500 – 504
  5. Cederblad, G; Fahraeus, L; Lindgren, K; “Plasma carnitine and renal-carnitine clearance during pregnancy”; American Journal of Clinical Nutrition; 1986; Volume 44:Pp
  6. Linus Pauling Institute at Oregon State University
"http://ta.wikipedia.org/w/index.php?title=கார்னிதின்&oldid=1061233" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்