காம்போசதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம்போசதேசம் இந்தியாவின் வடக்கிலும், காசுமீரதேசத்திற்கு வடகிழக்கிலும், இமயமலையின் மேல்பாகத்திலும், அகன்று விசாலமாக பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்திற்கு தெற்கு பாகத்திலே அதிகமான குகைகள் உண்டு,[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்திற்கு நடுவிலும், மேற்கிலும், தெற்குபாக முழுமையிலும் மலையின் தொடர் குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இத்தேசத்தின் பரப்பில் அங்கோலம் மரங்கள் அதிகமாக இருக்கும். இத்தேசத்தின் காடுகளில் கர்கம் என்னும் வெள்ளைக்குதிரைகளும்,கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த காம்போசதேசத்தின் கிழக்கிலும், பாஞ்சாலதேசத்தின் வடகிழக்கு மூலையில் கங்கோற்பத்தியில்கங்கையின் சிறு, சிறு அருவிகள் சைப்யா, சதாநீரா என்ற இரண்டு நதிகளாகி கிழக்குமுகமாய் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 196 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்போசதேசம்&oldid=2076849" இலிருந்து மீள்விக்கப்பட்டது