இசுதான்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கான்ஸ்டண்டினோப்பிள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
İstanbul
இஸ்தான்புல்
தொப்கபி அரமனை - ஹேகியா சோபியா - நீல மசூதி
தொப்கபி அரமனை - ஹேகியா சோபியா - நீல மசூதி
துருக்கியில் அமைந்திடம்.
துருக்கியில் அமைந்திடம்.
அமைவு: <span class="geo-dms" title="Maps, aerial photos, and other data for 41°00′44″N Expression error: Unexpected < operator.°Expression error: Unexpected < operator.Expression error: Unexpected < operator.Expression error: Unexpected >= operator.">41°00′44″N Expression error: Unexpected < operator.°Expression error: Unexpected < operator.Expression error: Unexpected < operator.Expression error: Unexpected >= operator. / 41.01224,
நாடு துருக்கியின் கொடி துருக்கி
பகுதி மர்மரா
மாகாணம் இஸ்தான்புல்
தோற்றம் 667 கி.மு., பைசான்ட்டியம் என்று
ரோமன்/பிசன்ட்டீன் காலம் கி.பி. 330, கான்ஸ்டண்ட்டினோப்பிள் என்று
ஒட்டோமான் காலம் 1453, கான்ஸ்டண்ட்டினோப்பிள் மற்றும் பல மொழியிலும் பல பெயர்கள் என்று
துருக்கி குடியரசு காலம் 1930ல் இஸ்தான்புல் என்று பெயர் மாற்றல்
மாவட்டங்கள் 27
பரப்பளவு
 - நகரம் 1,830.92 கிமீ²  (706.9 ச. மைல்)
ஏற்றம் 100 மீ (328 அடி)
மக்கள் தொகை (2007)[1]
 - நகரம் 11
 - அடர்த்தி 6,211/கிமீ² (16,086.4/ச. மைல்)
நேர வலயம் EET (ஒ.ச.நே.+2)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
EEST (ஒ.ச.நே.+3)
அஞ்சல் குறியீடு 34010 - 34850,
80000 - 81800
தொலைபேசி குறியீடு(கள்) (+90) 212 (ஐரோப்பிய பக்கம்)
(+90) 216 (ஆசிய பக்கம்)
இணையத்தளம்: இஸ்தான்புல் இணையத்தளம்

இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந் நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. 41° வ 28° கி இல் பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 - 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 - 1453 வரை பைசண்டைன் பேரரசின் தலைநகராகவும், 1453 - 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில், மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே.

வரலாறு[தொகு]

  • கி.மு.660 இல் பைசாண்டியத்தின் என்ட்ர பெயரில் சரய்புர்ன் கடலோரத்தில் இல் நிறுவப்பட்டது

இப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் நகரம் வரலாற்றில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவாக்கி. * கி.பி. 330 இல் கான்ஸ்டான்டினோபிள் பெயர் மாற்றம் அடைந்தது அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட பதினாறு நூற்றாண்டுகளாக நான்கு பேரரசர்களின் தலைநகராக இது இருந்தது.அவை ரோமானிய பேரரசு (330-395), பைசண்டைன் பேரரசு (395-1204 மற்றும் 1261-1453), இலத்தீன் பேரரசு (1204 - 1261), மற்றும் ஒட்டோமான் பேரரசு (1453-1922).

  • ரோமன் மற்றும் பைசண்டைன் காலத்தில் கிறித்துவ நகரமாக இருந்தது ஆனால் 1453 ல் ஓட்டோமங்களின் வெற்றிக்கு பின் கலிப என்ற இஸ்லாமிய கோட்டை நிறுவப்பட்டது.அந்த காலத்தின் அரண்மனைகள் மற்றும் மசூதிகள் இன்னும் இஸ்தான்புல் மலைகளில் காணப்படுகிறது.
  • இஸ்தான்புல் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குபகுதிகளை இணைக்கும் வழியில் உள்ளத்தால் இது பட்டு அதை என அழைக்கப்படுகிறது.
  • 1923 ல் துருக்கி குடியரசான பின் தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
  • 1930 ல் அதிகரப்போர்வமாக இஸ்தான்புல் என்று பெயர் மாற்றப்பட்டது

நிலஅமைப்பு[தொகு]

இஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்கு பகுதியில் துருக்கி அமைந்துள்ளது.கருங்கடல் மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல் மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளை பிரிக்கிறது வளைகுடா பகுதியில் ஒரு தங்க கொம்பு இயற்கை துறைமுகம் அமைந்ததது. மேலும் இது மற்ற பகுதியில் மழையால் சூழப்பட்டிருப்ப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரி படைகளின் தாக்குதகளை தடுத்தன ரோம் நகரை போல இந்நகரத்தை சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனை தளம் உள்ளது.மற்றொறு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர் பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இஸ்தான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலை மீது உள்ளது. இஸ்தான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்க ஏற்பட்டுள்ளது அவற்றில் 1509-ல் நிலஅதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. சமீபத்தில் 1999 இல், ஒரு பூகம்பம் இஸ்தான்புல் புறநகர் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத வைப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

காலநிலை[தொகு]

புதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இஸ்தான்புலில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை (CSA) மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை (CFA) நிலவுகிறது. கோடை மாதங்களில் 40 மில்லி மீட்டர்க்கு மழை குறைவாக மட்டுமே பெய்யும். அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளை கொண்டிருகிறது.தது. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளில் உயர் ஈரப்பத செறிவும் தெற்கில் உள்ள மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் குறைந்த காலநிலையும் உள்ளது. அடிக்கடி காலை வேளைகளில் நகரம் மூடுபனியால் மூடப்படுவதை இங்கே காணலாம். இதன் கோடை கால அதிகபட்ச வெப்பம் 29 டிகிரி செல்சியஸ் (84 டிகிரி பாரன்ஹீட்) மற்றும்

மேற்கோள்கள்[தொகு]

  1. Türkiye istatistik kurumu Address-based population survey 2007. Retrieved on 2008-03-19.

மேலும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுதான்புல்&oldid=1616877" இருந்து மீள்விக்கப்பட்டது