கான்யே வெஸ்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Kanye West கான்யே வெஸ்ட் |
|
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | கான்யே ஒமாரி வெஸ்ட் |
| பிறப்பு | சூன் 8, 1977 அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா |
| பிறப்பிடம் | சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
| இசை வகை(கள்) | ராப் இசை |
| தொழில்(கள்) | ராப்பர், இசைத் தயாரிப்பாளர் |
| இசைக்கருவிகள் | ராப், கின்னரப்பெட்டி, மேளம் |
| இசைத்துறையில் | 2000–இன்று |
| வெளியீடு நிறுவனங்கள் | குட் மியுசிக், ராக்-அ-ஃபெல்லா, டெஃப் ஜாம் |
| Associated acts | ஜெய்-சி, காமன், ஜான் லெஜென்ட், கான்சிக்குவென்ஸ், சைல்ட் ரெபெல் சோல்ஜர், லூப்பே ஃபியாஸ்கோ, ஃபரெல் வில்லியம்ஸ், மோஸ் டெஃப், டாலிப் குவாலி, யங் ஜீசி, டி.ஐ., லில் வெய்ன் |
| வலைத்தளம் | kanyeuniversecity.com |
கான்யே ஒமாரி வெஸ்ட் (Kanye Omari West, பிறப்பு ஜூன் 8, 1977) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞரும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார். இவரின் மூன்று தனியாக படைத்த ஆல்பம்கள் மொத்தத்தில் ஒன்பது கிராமி விருதுகளை வெற்றிபெற்றன.
அட்லான்டாவில் பிறந்த கான்யே மூன்று வயதில் சிக்காகோவுக்கு நகர்ந்து அங்கே வளர்ந்தார். சிக்காகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு இருந்து அங்கேயிருந்து பட்டதாரி செய்யாமல் ராப் இசை உலகில் தொடங்கினார். ஜெய்-சியின் 2001இல் வெளிவந்த ஆல்பம் த புளூப்பிரின்ட்டில் இவர் இசைத் தயாரிப்பாளராக இருந்து புகழுக்கு வந்தார். 2004இல் இவரின் முதலாம் ஆல்பம் த காலேஜ் ட்ராப்பவுட் வெளிவந்தது.
ஆல்பம்கள் [தொகு]
- த காலேஜ் ட்ராப்பவுட் (The College Dropout) (2004)
- லேட் ரெஜிஸ்டிரேசன் (Late Registration) (2005)
- கிராஜுவேசன் (Graduation) (2007)