காத்தான்குடித் தாக்குதல் 1990
காத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று ஹுஸைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.[1]. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.[2][3]
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 1, 1990ல் அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்களும், 2 தியதி மதவாச்சி, மட்டக்களப்பு மற்றும் மஜீது புரம் ஆகிய ஊர்களில் 15 முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்தே காத்தான்குடிப் படுகொலை நடந்தது. [4]
இத்தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாக அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் குறிப்பிட்டார். தமிழ் பேசுபவர்களாக இருந்தும் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பலமுறை தாக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.[5][6][7] [8]
இவற்றையும் பார்க்காவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- http://www.lankanewspapers.com/news%5C2006%5C8%5C7978_image_headline.html
- http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm
குறிப்புகள் [தொகு]
- ↑ "துப்பாக்கிகளில் பூக்கும் பூபாளம்" புத்தகத்திலிருந்து
- ↑ [1]
- ↑ towns shut down to mark massacre
- ↑ [2]
- ↑ [3]
- ↑ LTTE mercilessly slaughtered more than 100 Muslim civilians - including women and children
- ↑ Muttur Muslims fear LTTE attack
- ↑ SOUTH ASIA INTELLIGENCE REVIEW