காதல் யாத்திரை (லைலா - மஜ்னூன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதல் யாத்திரை (லைலா-மஜுனூன்) என்பது கவிஞர் முஸா 1955 ஆம் ஆண்டு வெளியிட்ட செளந்தர்ய முத்திரை கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் ஒரு குறுங்காப்பியம் ஆகும். இது உலகப் புகழ் பெற்ற அரபிய - பாரசிக லைலாவும் மஜ்னூனும் கதையைக் கருவாகக் கொண்டு, அரபுச் சூழலில் தமிழ்ப் பண்பாடும் கலந்து எழுதப்பட்டுள்ளது.[1]

அரபு நாடுகளில் நாடோடிக் கதையாக நீண்ட காலம் வழங்கி வந்த லைலா மஜ்னூன் கதையை பாரசிகக் கவிஞர் நிஸாமி (Nizami Ganjavi) 1192 ஆம் ஆண்டு பெரும் காப்பியமாக பாரசீக மொழியில் உருவாக்கினார். 1835 ஆம் ஆண்டு இக் கதை ஆங்கில மொழிக்கு யேம்ஸ் அட்கின்ஸனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதனைக் காப்பிய வடிவில் கவிஞர் முஸா தமிழில் எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 எம். எஸ். பஷீர். (2005). இக்கால இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்கள். சென்னை: சந்தியா பதிப்பகம்.