முதலாம் கான்ஸ்டன்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காண்ஸ்டண்டைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் கான்ஸ்டன்டைன்
ரோமப் பேரரசன்
Constantine Musei Capitolini.jpg
கப்பிட்டோலீன் அருங்காட்சியகத்தில் உள்ள கான்ஸ்டண்டைனின் சிலையின் தலை.
ஆட்சிக்காலம் 25 ஜூலை 306 – 29 அக்டோபர் 312
29 அக்டோபர் 312 – 19 செப்டெம்பர் 324
19 September 324 – 22 மே 337 (ஒருங்கிணைந்த பேரரசின் பேரரசன்)
முழுப்பெயர் பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ்
பிறப்பு 27 பெப்ரவரி 272
பிறப்பிடம் Naissus (modern Niš, சேர்பியா)
இறப்பு 22 May 337
இறந்த இடம் நிக்கோமீடியா (தற்கால இஸ்மித், துருக்கி)
முன்னிருந்தவர் கான்ஸ்டன்டியஸ் குளோரஸ்
பின்வந்தவர் கான்ஸ்டண்டைன் II, கான்ஸ்டன்டியஸ் II மற்றும் கான்ஸ்டன்ஸ்
மனவிகள் மினேர்வினா, 307 க்கு முன் இறந்துவிட்டார் அல்லது மண முறிவு ஏற்பட்டது.
பவுஸ்தா
அரச வம்சம் கான்ஸ்டன்டிய வம்சம்
தந்தை கான்ஸ்டன்டியஸ் குளோரஸ்
தாய் ஹெலெனா
பிள்ளைகள் கான்ஸ்டன்டினா ஹெலெனா, கிரிஸ்ப்பஸ், கான்ஸ்டண்டைன் II, கான்ஸ்டன்டியஸ் II மற்றும் கான்ஸ்டன்ஸ்
சமய நம்பிக்கைகள் பல கடவுள், பின்னர் கிறிஸ்தவம்

முதலாம் கான்ஸ்டன்டைன் என்று பொதுவாக அழைக்கப்படும் பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ் (27 பெப்ரவரி 272 – 22 மே 337) ரோமப் பேரரசர் ஆவார். இவர் கிழக்கத்திய மரபுவாதிகள், ஓரியண்டல் மரபுவாதிகள், பைசண்டைன் கத்தோலிக்கர் ஆகியோர் மத்தியில் புனிதர் கான்ஸ்டன்டைன் எனவும் அறியப்படுபவர். இவர் கி.பி 324 ஆம் ஆண்டு முதல் இறக்கும்வரை ஆட்சியில் இருந்தார். முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசரான இவர், தனக்கு முன்னிருந்த அரசனான டியோகிளீசியனால் கிறிஸ்தவர்களுக்கு விதிக்கப்பட்ட துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ததுடன், அவரது இணைப் பேரரசரான லிசினியசுடன் சேர்ந்து 313 ஆம் ஆண்டில் மிலான் ஆணை எனப்படும் சமய நல்லிணக்க ஆணையை வெளியிட்டார்.

கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினரால் பயன்படுத்தப்படும் பைசண்டியப் பொது வழிபாட்டு நாட்காட்டிப்படியும், கிழக்கத்திய கத்தோலிக்கத் திருச்சபை வழக்கப்படியும் கான்ஸ்டண்டைனும், அவரது தாயாரான ஹெலெனாவும் புனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், இலத்தீன் திருச்சபை இவரைப் புனிதராகக் காட்டவில்லை. எனினும், கிறிஸ்தவ மதத்துக்கு அவர் செய்த பணிகளுக்காக அவர் ஒரு பெரியவராக அவர்களால் மதிக்கப்படுகிறார்.

பண்டைக் கிரேக்கக் குடியேற்றமான பைசன்டியத்தை, கான்ஸ்டன்டைன், கான்ஸ்டன்டினோப்பிள் என்னும் பெயரில் பேரரசின் இருப்பிடம் ஆக்கினார். இது பைசன்டைன் பேரரசின் தலைநகரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கான்ஸ்டன்டைன்&oldid=1387311" இருந்து மீள்விக்கப்பட்டது