காடர் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காடர் | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கேரளாவின் எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள்; தமிழ்நாடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்கள்; ஆந்திரப் பிரதேசம் | |
| பேசுபவர்கள்: | 2,265 (1981) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு தமிழ்-மலையாளம் மலையாளம் காடர் |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | kej | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
காடர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 2,265 பேர்களால் பேசப்படுகிறது. இது காடா, காடிர் என்றும் அழைக்கப்படும். இம்மொழி மலையாளத்துக்கு நெருக்கமானது என்றும், தமிழுக்கு நெருங்கியது என்றும், மலையாளக் கூறுகளுடன் கூடிய தமிழின் வேறுபாடு எனவும் பலரும் பலவாறாகக் கூறியுள்ளனர். இம்மொழியைப் பேசும் மக்களிடையே தங்கள் முதல் மொழியிலான கல்வியறிவு வீதம் 1% மட்டுமே.