காகா (காற்பந்தாட்ட வீரர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர் பற்றியது. இதே பெயரில் உள்ள மற்ற கட்டுரைகளை இங்கு காகா பார்க்கவும்.
| Personal information | |||
|---|---|---|---|
| Full name | ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே | ||
| Date of birth | ஏப்ரல் 22, 1982 | ||
| Place of birth | பிரேசிலியா, பிரேசில் | ||
| Height | 1.86 m (6) | ||
| Playing position | Attacking midfielder | ||
| Club information | |||
| Current club | ரியல் மாட்ரிட் | ||
| Number | 8 | ||
| Youth career | |||
| 1994–2000 | சாவோ பாவுலோ | ||
| Senior career* | |||
| Years | Team | Apps† | (Gls)† |
| 2001–2003 | சாவோ பாவுலோ | 59 | (23) |
| 2003–2009 | மிலன் | 193 | (70) |
| 2009– | ரியல் மாட்ரிட் | 10 | (3) |
| National team | |||
| 2002– | பிரேசில் | 73 | (26) |
| * Senior club appearances and goals counted for the domestic league only. † Appearances (Goals). |
|||
காகா (Kaká) என்று அழைக்கப்படும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சான்டோஸ் லேய்டே (Ricardo Izecson dos Santos Leite; பிறப்பு: ஏப்ரல் 22, 1982), ஒரு பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர். இவர் தற்பொழுது ரியல் மாட்ரிட் அணிக்காகவும்[1] மற்றும் பிரேசில் அணிக்காகவும் விளையாடுகிறார். எட்டு வயதில் உள்ளூர் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்து தன் காற்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார் காகா . அப்பொழுது அவர் வரிப்பந்தாட்டமும் ஆடியதால், சாவோ பாவுலோ கழகத்துக்கு தன் முதல் ஒப்பந்தத்தை தரும் வரை அவரது கவனம் முழுதும் காற்பந்தாட்டத்தில் இல்லை. 2003-ஆம் ஆண்டு 85 லகரம் யூரோவுக்கு அவர் ஏ.சி.மிலன் கழகத்தில் சேர்ந்தார். இந்த இத்தாலிய கழகத்தில் இருக்கும்பொழுது தான் அவர் பலோன் டி'ஓர் வென்றார்.