கஹட்டோவிட

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கஹட்டோவிட
කහටෝවිට
Kahatowita
கஹட்டோவிட is located in இலங்கை
கஹட்டோவிட
கஹட்டோவிட
ஆள்கூறுகள்: 7°05′42″N 80°06′35″E / 7.09500°N 80.10972°E / 7.09500; 80.10972
நாடு  Sri Lanka
மக்கள் (2011)
 • மொத்தம் 3,250
நேர வலயம் இலங்கை சீர்தர நேரவலயம் (UTC+5:30)
 • கோடை (ப.சே.நே) not observed (UTC)
தொலைபேசி குறியீடு 033
Website www.kahatowita.com

கஹட்டோவிட(ஆங்கிலம்:Kahatowita,சிங்களம்:කහටෝවිට)இலங்கையின் மேல்மாகாணத்தில் கம்பகா மாவட்டத்தில் அத்தனகல்லை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கிராமமாகும்.

வரலாறு[தொகு]

கஹட்டோவிட முழுமையாக முஸ்லிம்களை கொண்ட ஓர் ஊராகும்.இலங்கையின் போத்துக்கீசர் காலணித்துவ ஆட்சியின் போது கொடுமைகளுக்கு உட்பட்ட கரையோர பிரதேசங்களில் இருந்த முஸ்லிம்கள்,இலங்கையின் உள்பிரதேசங்களுக்களில் குடியேற்றங்களை அமைத்தனர்.இவ்வகையில் முஸ்லிம்கள் குடியேறிய ஓர் ஊரே கஹட்டோவிட ஆகும்.ஆரம்பத்தில் குடியேறிய மக்கள் அத்தனகல்ல ஓயா ஆற்றுப்பள்ளதாக்கின் அருகே தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டனர்.கி.பி.1688 ஆம் ஆண்டு அத்தனகல்ல ஓயாவிற்கு அருகில் முதலாவது பள்ளிவாசல் கட்டப்பட்டது.காலப்போக்கில் அப்பள்ளிவாசல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.முஸ்லிம்கைள நல்வழிப்படுத்தும் நோக்கில் யெமனைச் சோந்த செய்யித் அஹமத் இப்னு முபாரக் மெளலானா(றஹ்) அவர்கள் 1857இல் இங்கு வருகைதந்தார்.அவர்கைளத் தொடாந்து 1859இல் யெமனைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு உமர் பாதிப் யெமானி(றஹ்) அவர்களும் வருகைதந்தனர்.இங்கு 1975இல் இரண்டாவது பள்ளிவாசல் கட்டப்பட்டது. இங்கு பெரும்பான்மை மக்கள் காதிரியதுன் நபவிய்யா,பாதிபிய்யதுல் காதிரிய்யா மற்றும் ஷாதுலிய்யா ஆகிய சூபி தரீக்காக்களை பின்பற்றுகின்றனர்.

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

கடல் மட்டத்தில் இருந்து 37 மீட்டர்(121.39 அடி) உயரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் வடகிழக்கே அத்தனகல்ல ஓயா எனப்படும் ஆறு பாய்கிறது.இங்கு தாழ்நாட்டு ஈரவலயக் காலநிலை காணப்படுகின்றது.

உள்நாட்டு அரசு நிர்வாகம்[தொகு]

கஹட்டோவிட அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றது.கஹட்டோவிட, கஹட்டோவிட மற்றும் கஹட்டோவிட மேற்கு என இரண்டு கிராம உத்தியோகத்தர் நிருவாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கஹட்டோவிட&oldid=1731781" இருந்து மீள்விக்கப்பட்டது