கல்கத்தா கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கத்தா கொடி

கல்கத்தா கொடி எனப்படுவது இந்தியாவின் ஆரம்பத்தில் பாவிக்கப்பட்ட ஒரு உத்தியோகப் பூர்வமற்ற கொடியாகும். சுசீந்திர பிரசாத் போஸ் என்பவரால் இந்தக் கொடி வடிவமைக்கப்பட்டு ஆகஸ்ட் 7, 1906 அன்று கல்கத்தா நகரில் பார்ஸி பகன் சதுரத்தில் என்றழைக்கபடும் கிரீன் பார்க் சதுக்கத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

முதல் இந்திய தேசிய மூவர்ணக் கொடியான இது ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என்ற மூவர்ண கிடையான பட்டிகளை கொண்டிருந்தது. மேல் பட்டையான ஆரஞ்சு நிறப்பட்டையில் பாதி விரிந்த நிலையில் எட்டு தாமரை சின்னங்களும், கீழ்ப்பட்டையான பச்சை பட்டையில் சூரியனையும் பிறையையும் சின்னமாக கொண்டுள்ளது. சூரியன் இந்துக்களையும் பிறை இசுலாமியர்களையும் குறிப்பிடப் பயன்பட்டது. இக்கொடியின் நடுவே இருந்த மஞ்சள் நிறப்பட்டையில் வந்தே மாதரம் என்று தேவநகரி மொழியில் எழுதப்பட்டும் இருந்தது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, K. V. (2007). Our national flag. Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India. இணையக் கணினி நூலக மையம்:1110172419. 
  2. "জাতীয় পতাকার প্রথম রূপকার হেমচন্দ্র কানুনগো আজও ইতিহাসে উপেক্ষিত". News18 Bengali (in Bengali). 2022-08-10. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
  3. "Parsi Bagan Lane: A Land Of Freedom Struggle - Asiana Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-16. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கத்தா_கொடி&oldid=3889852" இலிருந்து மீள்விக்கப்பட்டது