கலைமகன் பைரூஸ்
| கலைமகன் பைரூஸ் | |
| பிறப்பு | இஸ்மாயில் எம். பைரூஸ் சனவரி 26, 1974 மதுராப்புர,வெலிகம, இலங்கை |
|---|---|
| தங்குமிடம் | இலங்கை |
| பணி | கணனி பக்கவடிவமைப்பாளர் |
| சமயம் | இஸ்லாம் |
| வாழ்க்கைத் துணை | சித்தி பஹ்மியா |
| பிள்ளைகள் | நூருல் ஹக், முஹம்மது ஹாலித் |
கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz, பிறப்பு: ஜனவரி 26, 1974) என்ற பெயரில் எழுதும் இஸ்மாயில் எம். பைரூஸ் இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை வெலிகம, மதுராப்புரவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்,சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர். 1986களில் எழுதத்தொடங்கியவர்.
இவர் கலைமகன் பைரூஸ், இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கவிராஜன், பஹ்மியா மணாளன், அபூஹக், அபூஹாலித், தமிழ்ப்பித்தன் என்று பல புனைப்பெயர்களில் கவிதை (மரபுக்கவிதை, புதுக்கவிதை), சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மாணவர்க்கான ஆக்கங்கள் எனப் பல இலக்கியங்களை எழுதி வருகிறார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சி - இளைஞர் இதயம் நிகழ்ச்சி, மாணவர் மன்றம் நிகழ்ச்சிகளில் இவர் குரல் கொடுத்துள்ளார். அந்நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்களும் படைத்தளித்துள்ளார்.
வெலிகம ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையில் தமிழாசிரியராகக் கடமையாற்றும் இவர், மேடைநாடகங்கள் பலவற்றிலும் பங்கெடுத்துள்ளார். இவர் சிறந்த மேடைக்கவிஞரும் சிறந்த கணனி வடிவமைப்பாளரும் ஆவார். தமிழ்மொழியில் சிறந்த பேச்சாளரான இவரது மேடைக்கவிதைகள் எல்லோராலும் வெகுவாகப் பேசப்படுவனவாகும்.
அஸ்ஸபா வித்தியாலயம், அறபா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவர்.
பொருளடக்கம் |
[தொகு] எழுதிய நூல்கள்
- தமிழ் இலக்கிய சந்தர்ப்பம் கூறல்
- தமிழ் இலக்கண வினா-விடை
- அற்புத வளர்ச்சிபெறும் அறிவுநிலையம் அஸ்ஸபா
- நிழலும் நிதர்சனமும் (கவிதைத் தொகுப்பு)
[தொகு] வெளியிட்ட சஞ்சிகைகள்:
- பனிமலர் மாணவர் சஞ்சிகை
- மெய்யொளி (ரீடர்ஸ் டைஜஸ்ட் வகையிலான) மாணவர் சஞ்சிகை
- புத்தொலி மாசிகை
[தொகு] பிரசுரமான ஊடகங்கள்
வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, முஸ்லிம் குரல், இடி , தமிழ்க்கேசரி , ஜனனி, ஆதவன்,...
[தொகு] ஆக்கங்கள் இவற்றிலும்
விடிவெள்ளி, காற்றுவெளி, ஒருநாள் ஒரு கவிதை, முத்துக்கமலம், இன்பம் இங்கே, பூங்காவனம், கலையூற்று, மதுரம், தமிழ் மணம், செங்கதிர், ...
[தொகு] பங்கேற்ற நாடகங்கள்
1. ஆயிரம் பொற்காசுகள் - புலவர் பாத்திரம் 2. குமணன் நாடகம் - பெருஞ்சித்திரனார் பாத்திரம் 3. பொய்ம்முகங்கள் - ஹாஜியாரின் கணக்குப்பிள்ளை 4. விடியலை நோக்கி.. - கணக்குப்பிள்ளை
[தொகு] கௌரவங்கள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யுவக யுகம், உழைப்போம் உயர்வோம் நிகழ்ச்சிகளில் இவரைப் பேட்டி கண்டுள்ளது. இலங்கை வசந்தம் தொலைக்காட்சி இவரது ஆற்றல்களைக் கண்ணுற்று, 2012.05.05 ஆந் திகதி இவரைப் பேட்டி கண்டுள்ளது.
[தொகு] உசாத்துணை
- மண்ணூருக்கு மாண்பு சேர்த்தோர் பக்: 113
- இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம்: 2 பக்கம்: 111-114