கருவூர்த் தேவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருவூர்த்தேவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர். இவரது காலம் கங்கைகொண்ட சோளேச்சரம் தோன்றிய காலத்தை அடுத்த 11ஆம் நூற்றாண்டு.
|
|
ஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.
- இவரது பாடல்களில் இரண்டு.
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
கருவிநூல் [தொகு]
- கருவூர்த் தேவர் திருவிசைப்பா
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005