கருவிழி மாற்று சிகிச்சை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவிழி மாற்று சிகிச்சை (Corneal transplantation) என்பது கருவிழி நோயால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கண் தானமாகப் பெறப்பட்ட கருவிழிகளைப் பொருத்தும் சிகிச்சை முறையாகும்.
வரலாறு [தொகு]
கருவிழி மாற்று சிகிச்சையை முதன்முதலில் வெற்றிகரமாக செக் குடியரசு நாட்டு, பலச்சி பல்கலைகழகத்தைச் சேர்ந்த எட்வட் ஜீர்ம் என்பவரால் 1905ம் ஆண்டு செய்யப்பட்டது. ரமொன் காஸ்ட்ரோவிஜோ மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விலாடிமிர் பிலாடொவ்(1912) என்பவர்களும் கருவிழி மாற்று சிகிச்சையில் முன்னோடிகளாவார்கள்.[1][2] காஸ்ட்ரோவிஜோ என்பவரே 1936ல் நவீன முறையில் கருவிழி கூம்பல்(keratoconus) மாற்று சிகிச்சையை முதலில் செய்தார்.[3][4] உரோம அளவுடைய நுண்ணோக்கிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட முறையில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Vladimir Filatov, peoples.ru
- ↑ Eye repair - TIME, Monday, Apr. 13, 1936
- ↑ Castroviejo R (1948). "Keratoplasty for the Treatment of Keratoconus". Trans Am Ophthalmol Soc 46: 127–53. பப்மெட் 16693468.
- ↑ Castroviejo, R.: International Abstract of Surgery, 65:5, December, 1937.