கருணைக் கொலை
கருணைக் கொலை (mercy killing) (euthanasia) என்பது வலியையும் துன்பத்தையும் நீக்கும் பொருட்டு ஒருவரின் உயிரை முடிவடையச் செய்தல் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] சட்டமாக்கப்பட்டுள்ள நாடுகள்
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனாலும் கருணைக் கொலை செய்பவர் சில சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்றேல் அவர் தண்டிக்கப்படும் நிலை உருவாகும்.
[தொகு] இந்தியாவில் கருணைக்கொலை
இந்திய சட்டப்படி இது கொலையே (homicide) ஆகும். இந்தியாவில் எவ்விதத்திலும் இதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. சிலரை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது எழுவதால் இந்தியாவில் இது பெரிதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே விளங்கி வருகிறது. மார்ச்சு 2011 வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் இத்தகைய நோயாளிகள் முனைப்பற்ற முறையில் இறந்துபோக மருத்துவர்கள் அனுமதிக்கலாம் என்று முதல்முதலாக பரிந்துரைக்கப்படுள்ளது. இத்தகைய நடைமுறையைக் கையாளுவதற்கு முன் மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஒரு விதியையும் விதித்துள்ளது.[1] நாடாளுமன்றத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்படும்வரை இதுவே வழிகாட்டலாக இருக்கும்.
37 ஆண்டுகளாக செயலிழந்த நிலையில் இருந்து வரும் அருணா சான்பாக்கை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென எழுத்தாளர் பிங்கு விரானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, கியான்சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் மார்ச் 7, 2011ல் விசாரணைக்கு வந்தது. அருணா தங்கவைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 37 ஆண்டுகளாக மருத்துவமனையில் உள்ள அருணாவை அங்குள்ள செவியர்களும், மருத்துவர்களும் அர்பணிப்பு உணர்வுடன் கவனித்து வருவதாக வாதிட்டார். அருணா சான்பாக் வழக்கில் 07-03-2011 அன்று தீர்ப்பளித்த இந்தியாவின் உச்சநீதிமன்றம், "கருணைக்கொலை எதிர்நோக்கியிருப்பவருக்கு தேவையான உயிர் ஆதாரங்கள் (life support), உணவு, நீர் நிறுத்தப்பட்டிருந்தாலே இம்முடிவை எடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி மருத்துவர்களே முடிவு செய்வர்" என்று அறிவித்தது.[2] மேலும் அருணா வழக்கைப் பொறுத்தவரை அதன் உண்மைகளும், சூழல்களும், மருத்துவ ஆதாரங்களும் அவரை கருணைக்கொலை செய்யத் தேவையில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.[3] மிகவும் தவிர்க்க முடியாத, சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே ஒருவர் கருணைக் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ளனர். இத்தீர்ப்பானது இந்தியாவில் கருணைக்கொலை குறித்த புதிய பார்வைக்கு வழிகோலியுள்ளது.
[தொகு] வகைகள்
[தொகு] தன்விருப்ப கருணைக்கொலை
நோயரின் விருப்பத்தின் பேரில் செய்யப்படுவதாகும். மருத்துவரின் உதவியுடன் நோயரே தன் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவதால் இதற்கு உதவி செய்யப்பட்ட தற்கொலை என்ற பெயருமுண்டு
[தொகு] விருப்பம் பெறவியலா வகை
நோயரின் விருப்பத்தைப் பெற இயலா நேரத்தில் செய்யப்படுவது இது. எ.கா: உயிரை பாதிக்கும் நோயுடன் பிறந்துள்ள குழந்தை, ஆண்டுக்கணக்கில் ஆழ்மயக்கத்தில் இருக்கும் நபர்
[தொகு] விருப்பற்ற வகை
இது நோயரின் விருப்பத்திற்கெதிராக நடத்தப்படுவதாகும்.
[தொகு] நடைமுறை வகைகள்
[தொகு] முனைப்பு வகை
நச்சுப் பொருட்களை (முனைப்புடன்) பயன்படுத்தி உயிரை முடிவுக்குக் கொண்டு வருவது முனைப்பு வகை ஆகும். நோயரே கருணைக்கொலை கருவியைப் பயன்படுத்தி தன் உயிரை முடிவுக்குக் கொண்டு வரலாம்.
[தொகு] முனைப்பற்ற வகை
உயிர் வாழ்வைத் தொடர இன்றியமையாய் இருப்பவற்றை (எ.கா: உயிர் வளி, உணவு, பாக்டீரிய எதிர் மருந்துகள் முதலியன) நிறுத்துதல் முனைப்பற்ற வகையில் அடங்கும்.