கனடிய தலைமை தணிக்கை அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடிய தலைமை தணிக்கை அலுவலர் (ஆங்கிலம்: Auditor General of Canada) என்பர் சுதந்திரமான தணிக்கைகளை (audits) மேற்கொண்டு நடுவண் அரசின் பொறுப்புடைமைக்கு உதவுதலைப் பணியாகக் கொண்ட ஒரு அரச அலுவலர் ஆவார். இவர் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு இல்லாமல் நேரடியாக கனடியப் பாராளுமன்றத்துக்கு அறிக்கை தருவார். இந்தத் தணிக்கைகள் பாராளுமன்றத்துக்கு புறவயத் தகவல்களை வழங்கி அரசின் செயற்பாடுகளைப் பகுப்பாய உதவுகின்றன. தணிக்கை அறிக்கைகள் அரசுகளின் ஊழல்கள், திறனின்மைகள் (inefficiencies), முறைகேடுகளை வெளிப்படுத்தி அரசுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]