கனகா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகா
பிறப்புகனகா மஹாலட்சுமி
சூலை 14, 1973 (1973-07-14) (அகவை 50)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1989–2001

கனகா (பிறப்பு: 14 சூலை 1973) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ஆம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு[1]. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

2007 இல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணம் முடிந்து 15 நாள் கழித்து அவர் காணவில்லை என்றும், பிப்ரவரி 6, 2010 வரை அவரைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

மலையாளம்[தொகு]

  • காட்பாதர் - 1991
  • வியட்நாம் காலனி - 1992
  • கோளாந்தர வார்த்த - 1993
  • பின்காமி - 1994
  • வார்த்தக்யபுராணம் - 1994
  • குஸ்ருதிக்காற்று - 1995
  • மன்னாடியார் பெண்ணினு செங்கோட்டச்செக்கன் - 1997
  • நரசிம்மம் - 2000

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.kaumudi.com/innerpage1.php?newsid=39490[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-10-01/kanaka-devika-muthu-kumar-06-02-10.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகா_(நடிகை)&oldid=3701312" இலிருந்து மீள்விக்கப்பட்டது