கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிர் மருத்துவத்தில், கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் (Radiation Oncologist) மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறார். அனைத்துப் புற்று நோயாளிகளையும் எடுத்துக் கொண்டால், அவர்களில் 60% நோயாளிகள் ஏதாவது ஒரு நிலையில் கதிர் மருத்துவம் மூலம் பயனடைகின்றனர். கதிர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவரே இந்நோயாளிகளுக்கு கதிர் மருத்துவம் மேற்கொள்ள முடியும். இன்று பலநுட்பமான கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. எக்சு கதிர்களே அன்றி எலக்ட்ரான், புரோட்டான், பை மேசான், நியூட்ரான், மற்றும் கனமான கார்பன் போன்றவற்றின் அயான்கள் என்று பலவும் பயன்படுகின்றன. காமா கத்தி (Gamma knife), கணினிக் கத்தி (Cyber knife), போன்ற கருவிகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். கதிர் மருத்துவத்துடன் தொடர்புடைய கதிர் உயிரியல், மற்றும் அறுவை, வேதி மருந்துவ முறைகள் கதிர் மருத்துவத்திற்கு உறுதுணையாக உள்ளன. சிறப்புப் பயிற்சி இல்லாத மருத்துவர்களால் நல்ல மருத்துவம் சாத்தியப்படாது. இவற்றில் பயிற்சிப் பெற்றவரே கதிர் வீச்சு புற்றுநோய் மருத்துவராவார்.