கண்டி மகமாயா பெண்கள் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கண்டி மகமாயா பெண்கள் கல்லூரி | |
| அமைவிடம் | |
|---|---|
| கண்டி இலங்கை |
|
| தகவல் | |
| வகை | தேசிய பாடசாலை |
| குறிக்கோள் | Vijja Uppaththang Setta Pali - "Knowledge is Supreme" (Buddhist quote from the Dhammapada) |
| தொடக்கம் | சனவரி 14 1932 |
| பணிக்குழாம் | 185 |
| தரங்கள் | வகுப்புகள் 1 - 13 |
| பால் | பெண்கள் |
| வயது | 6 to 18 |
| மொத்த சேர்க்கை | 5000 |
| மாணவர்கள் | Mayans |
| நிறங்கள் | Navy & Gold
|
| இணையத்தளம் | www.mahamaya.lk |
கண்டி மகமாயா பெண்கள் கல்லூரி (Mahamaya Girls' College, Kandy) இலங்கையிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கண்டியில் அமைந்துள்ளது.
சனவரி 14 1932 இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கண்டி மாநகரில் அமைந்துள்ள வாவிக்கு அண்மையிலுள்ள இக்கல்லூரி இயற்கை வனப்புமிக்கது. தற்போது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.