கணினி நச்சுநிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கணினி வைரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினி நச்சுநிரல் (computer virus, கணினி வைரஸ்) கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே பிரதியெடுக்கும் .exe மற்றும் ஏனைய கோப்புக்களைப் பாதிக்கும் ஓரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அக்கக்கணினி வலையமைப்பு) காவிச்செல்லக்கூடிய செமிப்பு ஊடகங்கள் எடுத்துக்காட்டாக பிளாஷ் டிஸ்க் போன்றவற்றாலும் பரவுகின்றது.

அநேகமான கணினிகள் இன்று இணையத்துடனும் அகக்கணினி வலையமைப்புடனும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கணினிகள் நச்சுநிரல்களைப் பரப்புவதற்கும் உதவுகின்றன. இன்றைய நச்சுநிரல்கள் உலகாளவிய வலையமைப்பு, மின்னஞ்சல் மற்றும் கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புக்களூடாகவும் பரவுகின்றன.

கணினி வைரஸ் ஆனது இயற்கையான நச்சு நிரல் போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும். நச்சுநிரலானது பலவாறு பரப்பப்படும் இவ்வகைச் செயற்பாடானது கெட்டமென்பொருள் en:Malware எனப்படும். பொதுவான பாவனையில் கணினி வைரஸ் என்பது கணினிப் புழுக்கள் en:Computer worm, நல்ல நிரல்கள்போல் நடிக்கும் வைரஸ்கள் en:Trojan horse (computing) எல்லாமே வைரஸ் என்றே அழைக்கப் படினும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபாடானவை. இவை கிருமிநிரல்களை ஒவ்வொரு கணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கின்றன. இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது கடன் அட்டை இலக்கங்களைத் தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்கின்றன. சில சமயங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டுகளையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன. பின்னர் அவைகளத் தனது எஜமானனுக்கு (Owner of that virus) இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன.

சில நச்சுநிரல்கள் நிரல்களில் பாதிப்பினை ஏற்படுத்தி கணினிக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் கோப்புக்களை அழித்தல், கோப்புக்களின் குணாதிசயங்களை மாற்றுதல் (எடுத்துக்காட்டாக சிஸ்டம் கோப்பாகவோ, மறைக்கப்பட்ட கோப்பாகவோ) மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் பயனர் பாவிக்கும் நிரல்களுடன் குழப்பத்தை உண்டு பண்ணிக் கணினியை நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறான தவறான நிரல்களினால் கணினியில் தேவையான தரவுகளிற்கு அழிவுகள் ஏற்படலாம்.

கணினி நச்சுநிரல்கள் கணினியில் அழித்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டவை. சில நச்சுநிரல்கள் கணினியின் தொடக்க செயல்பாட்டை தாமதப்படுத்தும் அல்லது கணினி வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். சில நச்சுநிரல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குணடுகள் போன்று குறிப்பிட்ட தினத்தில் மட்டும் செயற்படும். பொதுவாக விண்டோஸ் கணினிகள் 30 வினாடிகளில் ஆரம்பிக்கும். இந்த நச்சுநிரலினால் கணினி இயக்கம் தாமதம் ஆகலாம். மாறாக ஒரு கணினி விண்டோஸ் இயங்குதளத்தை ஆரம்பிக்க 1 நிமிடமளவில் எடுத்தால் முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம்.

நிறுவல்களில் இயங்குதளத்தை நிறுவும்போதே இவ்வசதியினை ஏற்படுத்தவியலும்.

  1. பிறரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தும் யுஎஸ்பி பிளாஷ்டிஸ்க், Floppy disk, CD போன்றவைகள் முறையாகசோதித்த பின்னரே உபயோகிக்கவேண்டும்.(முடிந்த அளவுக்கு அவைகளைத்தவிர்க்க வேண்டும்.) அநேகமான யுஎஸ்பி பிளாஷ் டிஸ்குகளில் Autorun.inf கோப்புகளூடாகக் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்குக் கோப்புக்கள் தாவிக்கொள்கின்றன.
  2. வேண்டாத விளையாட்டு மெனபொருட்கள் இலவசமாகக் கிடைக்கிறதே என்று இணையத்தில் இருந்து (குறிப்பாக அதிகார்ப்பூர்வமல்லாத தளங்களில் இருந்து) இறக்கிக்கொள்வதோ அல்லது நண்பர்களிடம் இருந்து வாங்கி உபயோகிப்தையோ குறைப்பது நல்லது.
  3. முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி கிருமிச்சோதிப்புக்கு உட்படுத்தவேண்டும்.
  4. மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் தமக்கு வேண்டியவரா இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். இவைகள் பெரும்பாலும் கிருமி நிரல்களைத் தாங்கி வரப்பயன்படுத்தப்படுகின்றன.

முதல் நச்சு நிரல்[தொகு]

கணினியை செயலிழ்க்க செய்யும் நச்சு நிரல்கள் முதன் முதலில் 2004-ஆம் ஆண்டிலேயே பரப்பப்பட்டன.’காபிர் ஏ’ என்பதே முதல் நச்சு நிரலாகும்.[1]

வந்தபின் காப்பு[தொகு]

மேலும் இத்தகைய நச்சுநிரல்களை அழிக்க அல்லது தடை செய்வதற்கு என்று நச்சுநிரல்தடுப்பி கிடைக்கின்றன. இந்த நச்சுநிரல்தடுப்பியை நாம் நமது கணினியில் பதிந்து வைத்து அவற்றை பயன்படுத்தலாம். ஆனாலும் இங்கு பல விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன

ஒரு நச்சுநிரல்தடுப்பி(en:Antivirus software) அனைத்து நச்சுநிரல்களையும் அழித்துவிடுவதில்லை, காரணம் ஏற்கனவே வந்த ஒரு கிருமிநிரலுக்குத்தான் அதை அழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமிநிரல்களுக்கு நாளைதான் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு காரணம் ஒவ்வொரு நச்சுநிரல்தடுப்பி எழுத்தாளர்களும் புதுப்புதுவிதமான முறைகளைக்கடைபிடிப்பதால் தான். அந்தமுறைகளை நன்கு ஆராய்ந்து அந்த புதிய கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்துதான் அதற்கு அழிப்பான்கள் (vaccines) எழுதப்படுகின்றன. ஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளய கிருமிகளை அழிக்கப்போவதில்லை. எனவே அடிக்கடி உங்களது நச்சுநிரல்தடுப்பி மென்பொருளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இன்னுமொரு விடயம், இந்த கிருமி அழிப்பான் மென்கலன்களை எழுதுபவர்கள் பல கிருமிநிரல்களை புதிதுபுதிதாக உலவவிடுகிறார்கள். அதன்பின் அதற்கான அழிப்பானைதயார்செய்து விற்பனை செய்துவிடுகிறார்கள் [சான்று தேவை]. அந்த சமயத்தில் வேறு புதிய கிருமிகளை வெளியே அனுப்புகின்றனார். ஒரு கிருமியை எழுதியவருக்கு அது எவ்வாறு செயல்படும் என்பது தெரிந்துவிடுவதால் அதனை அழிக்க எழிதில் அழிப்பனை உருவாக்க முடியும். அதேசமயத்தில் ஒரு புதிய கிருமிநிரலை எடுத்துக்கொண்டு அது எவ்வாறெல்லாம் தாக்குகிறது, பரவுகிறது எனபதை நன்கு ஆய்ந்து அதனை அழிப்பதற்கு, தடுப்பதற்கும் நிரல்களை உருவாக்குவது கடினமான பணி.

மேற்கோள்கள்[தொகு]

  1. 25-12-2013 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ்.பக்கம்-02

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_நச்சுநிரல்&oldid=1577280" இருந்து மீள்விக்கப்பட்டது