கணபதிபுலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணபதிபுலே
गणपतीपुळे
கணபதிபுளே
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ரத்னகிரி மாவட்டம்
ஏற்றம்0 m (0 ft)
மொழிகள்
 • ஆட்சிமொழிமாரத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்415 622
வாகனப் பதிவுMH-08

கணபதிபுலே (ஆங்கிலத்தில்; Ganapatipulé மராத்தியில்: गणपतीपुळे) என்பது மகாராட்டிர மாநிலம், இரத்தினகிரி மாவட்டத்தில், கொங்கணி கடற்கரையில் உள்ள ஊர். ரத்னகிரியைச் சுற்றிலும் அழகான ஆலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் கணபதிபுலேயில் அமைந்திருக்கும் விநாயகர் கோயில். இத்தலம் அஷ்ட விநாயகர்களில் ஐந்தாவதாக உள்ளது.

அமைவிடம்[தொகு]

இது பசுமையான குன்றின் அடிவாரத்தில், கடற்கரையில் அமைந்துள்ளது. இது 300 வீடுகள் அடங்கிய கிராமமாகும். இங்குள்ள கணபதி கோயில் சிவப்பு-வெள்ளை நிறத்தில் உள்ளது

கோயில்[தொகு]

கணபதி கோயில்

பழைமையான இந்தக் கோயில், பேஷ்வாக்கள் காலத்திலிருந்தே உள்ளது. இக்கோயிலில் உள்ள பிள்ளையார் சுயம்பு என்று கூறப்படுகிறது. கருவறை செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டது. பக்கதர்கள் தரிசிக்கும் கூடமானது கொங்கணி பாணியில் ஆனது. இக்கோயிலுக்கு பின்னுள்ள மலையைப் பிள்ளையாரின் சொரூபமமாகப் பக்தர்கள் கருதி மலையை வலம்வருகின்றனர்.

மரபு வரலாறு[தொகு]

முகலாயர் ஆண்ட ஆண்ட காலத்தில், இப்போது கோயிலுள்ள இடத்தில் தாழை வனம் இருந்தது. அங்கே பிடே என்றொரு அந்தணர் இருந்தார். ஒரு சமயம் அவருக்கு வாழ்க்கையில் இக்கட்டான நிலை வந்தது. அந்த வனத்திலேயே உண்ணாமல், தன் துயர் தீரப் பிள்ளையாரை நோக்கித் தவம் இருந்தார். பிள்ளையாரும் அவர் கனவில் தோன்றி, இந்த மலையே என் நிகர ரூபம் (அரூபம்), நீ உன்னுடைய பூசைகளை நடத்து உன்னுடைய குறைகள் தன்னாலேயே மறையும் என்றதாகவும், பசு ஒன்று பால் கொடுக்காமல் தற்போது கணபதி சிலை இருக்கும் இடத்தில் வந்து பால் சொரிவது தெரியவந்ததாகவம், இடையன் இந்த அதிசயத்தைக் கூற, அவ்விடத்தில் சுத்த‍ம் செய்ய, கனவில் கண்ட பிள்ளையாரின் சிலை அங்கு இருப்பதைக் கண்டு அங்கே கோயில் கட்டி வழிபட ஆரம்பித்ததாகக் கதை நிலவுகிறது.

கடற்கரை[தொகு]

கணபதிபுலே கடற்கரையில் சூரிய அஸ்தமனம்

இங்கு அழகான கடற்கரை உள்ளது. இங்குச் சூரிய உதயமாவதும் மறைவதையும் காணப் பயணிகள் மிகவும் விரும்புவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதிபுலே&oldid=2225715" இலிருந்து மீள்விக்கப்பட்டது