கட்டிடத் தகர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A high-reach excavator is used to demolish this tower block in northern England

கட்டிடத் தகர்ப்பு (demolition) என்பது பழைய அல்லது இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடங்களைத் தகர்த்தல் ஆகும். இச்செயற்பாட்டை இடித்து தள்ளல், அழித்தல், வீழ்ச்சியுற செய்தல் என்றும் கூறலாம். கட்டிடங்கள் இருக்கும் இடத்தை மீள் உபயோகிப்பதற்காகவும், சூழலை மேம்படுத்துவதற்காகவும் கட்டிடத் தகர்ப்பு அவசியமாறுகின்றது.

கட்டிடத்தை வீழ்கட்டமைப்பு முறைகளை பின்பற்றாமல் வெறுமனே பாரிய சாதனங்கள் கொண்டு தகர்த்தால் அக்கட்டிடங்கள் கட்டப்பட்ட பல பொருட்களை மீள் உபயோகிக்க முடியாமல் போகும். மேலும் இடித்து தள்ளப்பட்ட கழிவுகளை தகுந்த மாதிரி அகற்ற வேண்டிய பிரச்சினையும் உருவாகும். இதனால், கட்டிட தகர்ப்புக்கு பதிலாக வீழ்கட்டமைப்பு முறை தற்சமயம் மேலை நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடத்_தகர்ப்பு&oldid=1572817" இருந்து மீள்விக்கப்பட்டது