கட்டாயக் கருவுறுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டாயக் கருவுறுதல் (Forced pregnancy) பெண்களைக் கட்டாயப்படுத்தி கருத்தரிக்க வைப்பதாகும். கட்டாயத் திருமணத்தாலோ, அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவோ இனப்படுகொலையின் அங்கமாகவோ இது நடைபெறலாம். கட்டாயக் கருவுறுதல் மூலமாக குழந்தை பிறந்தால் அது கட்டாய இனப்பெருக்கம் எனப்படும்.

மணப்பெண் கடத்துதல்[தொகு]

பொதுவாக, மணப்பெண் கடத்துவோரும் கட்டாயத் திருமணத்தின் போதும் கட்டாயக் கருத்தரிக்க வைக்கும் நோக்குடன் "மணப்பெண்" வன்புணரப்படுகின்றாள். இதனால் அவள் வன்புணர்ந்தவரையும் அவர் குடும்பத்தையும் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. வன்கலவி குறித்த சமூக முன்முடிவுகளால் அவளால் தனது குடும்பத்திற்கு மீள முடியாதுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைத்தனப் பெருக்கம்[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைத்தனக் காலத்தில் பல அடிமை உரிமையாளர்கள் தங்கள் அடிமைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவித்துத் தங்கள் அடிமைச் செல்வத்தை வளர்க்க விரும்பினர்.[1]

அடிமை இனப்பெருக்கத்தின்போது ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் கட்டாயப்படுத்திப் பாலுறவுக் கொள்ளச் செய்தனர்; பின்னர் ஏற்பட்ட கருத்தரிப்பைப் பேணினர். முதலாளியும் அடிமையும் பாலுறவுக் கொண்டு அடிமைக் குழந்தைகளைப் பெறுவதும் மிகுந்த குழந்தைகளைப் பெற்றுத்தரும் பெண்ணடிமைகளுக்கு முன்னுரிமை விலை இருந்ததும் வழமையாக இருந்தது.[2]

விலை கொடுத்து வாங்காது புதிய அடிமைகளைப் பெறுவதும், அத்திலாந்திக் அடிமை வணிகம் முடிவுற்ற நிலையில் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், அடிமைகளின் உடல்நலத்தையும் செயற்திறனையும் மேம்படுத்துவதும் அடிமை இனப்பெருக்கத்தின் நோக்கமாக இருந்தது.

இனப்படுகொலையின் அங்கமாக கட்டாயக் கருவுறுதல்[தொகு]

வன்கலவி, பாலின அடிமை, மற்றும் தொடர்புடைய கட்டாயக் கருவுறல் ஆகியன செனீவா நெறிமுறைப்படி தற்போது மானுடத்திற்கு எதிரானக் குற்றங்களாகவும் போர்க்குற்றங்களாகவும் ஏற்கப்பட்டுள்ளன;[3] குறிப்பாக 1949இலிருந்து நான்காம் செனீவா மாநாட்டின் விதி 27படியும் பின்னர் 1949 செனீவா நெறிமுறைகளுக்கு சேர்க்கப்பட்ட 1977 கூடுதல் நெறிமுறைகளும் போர்க்கால வன்கலவியையும் வலுக்கட்டாய பாலியல் தொழிலையும் வெளிப்படையாக தடை செய்கின்றது. அனைத்துலக்குற்றவியல் நீதிமன்றத்தின் ஆட்புலத்தை வரையறுக்கும் உரோம் சட்டத்தின் தெளிவுறுத்தும் குறிப்பாணை பரந்தளவில் அல்லது முறையாக செயற்படுத்தப்படும் வன்கலவி, பெண்ணடிமைத் தனம், கட்டாய பாலியல் தொழில், கட்டாய கருவுறுதல் ஆகியன மானுடத்திற்கு எதிரானக் குற்றங்களாக ஏற்றுள்ளது.[4][5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Marable, Manning, How capitalism underdeveloped Black America: problems in race, political economy, and society South End Press, 2000, p 72
  2. Marable, ibid, p 72
  3. "Geneva Conventions as Discussed in Rape Crime". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
  4. As quoted by Guy Horton in Dying Alive – A Legal Assessment of Human Rights Violations in Burma April 2005, co-Funded by The Netherlands Ministry for Development Co-Operation. See section "12.52 Crimes against humanity", Page 201. He references RSICC/C, Vol. 1 p. 360
  5. "Rome Statute of the International Criminal Court". legal.un.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டாயக்_கருவுறுதல்&oldid=2718364" இலிருந்து மீள்விக்கப்பட்டது