கட்டமைப்புவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கத்தைய
கலை இயக்கங்கள்
அடிமன வெளிப்பாட்டியம்
உணர்வுப்பதிவுவாதம்
கட்டமைப்புவாதம்
கியூபிசம்
மறுமலர்ச்சி
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]

தொகு

கட்டமைப்புவாதம் (Constructivism), 1914 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் தோன்றிய ஒரு கலை மற்றும் கட்டடக்கலை சார்ந்த இயக்கமாகும். சிறப்பாக இது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பெரிதும் புகழ் பெற்றிருந்தது. தற்காலத்தில் இந்தச் சொல் நவீன கலை தொடர்பில் பெரிதும் பேசப்படுகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது. இந்த இயக்கம் "தூய" கலை என்ற கருத்துருவைப் புறந்தள்ளி, கலையானது, சமூகவுடைமை முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது போன்ற, சமூக நோக்கங்களுக்குப் பயன்படும் ஒரு கருவி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. கட்டமைப்புக் கலை (Construction Art) என்ற தொடர், அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Alexander Rodchenko) என்பவருடைய ஆக்கமொன்றை விளக்குவதற்காக 1917 இல் கஸிமிர் மலேவிச் (Kazimir Malevich) என்பவரால் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. Constructivism (கட்டமைப்புவாதம்) என்ற சொல்லின் முதற் பயன்பாடு நவும் கபோ (Naum Gabo) என்பவரின் 1920 இன் Realistic Manifesto இல் முதலில் இடம்பெற்றது.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர்.

கட்டமைப்புவாதம் சார்ந்த கலைஞர்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டமைப்புவாதம்&oldid=3237853" இலிருந்து மீள்விக்கப்பட்டது