கடைசித் தீர்ப்பு (மைக்கலாஞ்சலோ)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கடைசித் தீர்ப்பு The Last Judgment |
|
|---|---|
| இத்தாலியம்: Il Giudizio Universale, பிரெஞ்சு: Le Jugement Dernier | |
| ஓவியர் | மைக்கலாஞ்சலோ |
| ஆண்டு | 1537-1541 |
| வகை | பிரெஸ்கோ |
| பரிமாணம் | 1370 சமீ × 1200 சமீ (539.3 அங் × 472.4 அங்) |
| இருக்குமிடம் | சிஸ்டைன் சேப்பல்,வத்திக்கான் நகரம் |
கடைசித் தீர்ப்பு (The Last Judgment) என்பது இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டிடக்கலைஞருமான மைக்கலாஞ்சலோ தீட்டிய உட்கூரை ஓவியம் ஆகும். இந்தப் புகழ்பெற்ற ஓவியம இத்தாலியின் சிஸ்டைன் சேப்பல் என்ற தேவாலயத்தின் உட்கூரையில் தீட்டப்பட்டுள்ளது. மைக்கலாஞ்சலோ இந்தச் சுவர் ஓவியத்தைத் தீட்டி முடிக்க 1536 ஆம் ஆண்டிலிருந்து 1541 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் ஆயிற்று.