கடுங்கரி
| கடுங்கரி | |
|---|---|
கடுங்கரி காட்டு |
|
| பொதுவானாவை | |
| பகுப்பு | இயற்கை தனிம கனிமம் |
| வேதி வாய்பாடு | C |
| இனங்காணல் | |
| நிறம் | Iron-black to steel-gray; deep blue in transmitted light |
| படிக இயல்பு | Tabular, six-sided foliated masses, granular to compacted masses |
| படிக அமைப்பு | Hexagonal |
| இரட்டைப் படிகமுறல் | Present |
| பிளப்பு | Basal - perfect on {0001} |
| முறிவு | Flaky, otherwise rough when not on cleavage |
| விகுவுத் தன்மை | Flexible non-elastic, sectile |
| மோவின் அளவுகோல் வலிமை | 1–2 |
| மிளிர்வு | Metallic, earthy |
| கீற்றுவண்ணம் | Black |
| ஒளிஊடுருவும் தன்மை | Opaque, transparent only in extremely thin flakes |
| அடர்த்தி | 2.09–2.23 g/cm3 |
| ஒளியியல் பண்புகள் | Uniaxial (–) |
| பலதிசை வண்ணப்படிகமை | Strong |
| கரைதிறன் | Molten Ni |
| மேற்கோள்கள் | [1][2][3] |
கடுங்கரி (graphite,
/ˈɡræfaɪt/ அல்லது காரீயம் அல்லது பென்சிற்கரி என அறியப்படும் கனிமம் கரிமத்தின் ஓர் தனிமப் புறவேற்றுரு ஆகும். இதனை எழுதுகோல்களில் (பென்சில்) பயன்படுத்துவதால் அபிரகாம் காட்லாப் வெர்னர் என்பவர் 1789இல் இதற்கு புராதன கிரேக்கத்தில் எழுது என்பதற்குரிய γράφω (graphō) என்ற சொல்லைக் கொண்டு கிராஃபைட்டு [4] (பென்சிற்கரி) எனப் பெயரிட்டார். கரிமத்தின் மற்றுமொரு தனிம்ப் புறவேற்றுருவான வைரம் போலன்றி கடுங்கரி ஓர் மின் வன்கடத்தியும் ஓர் குறை உலோகமும் ஆகும் . இந்தப் பண்புகளால் இது மின்பொறி விளக்கு மின்வாயிகள் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது. கடுங்கரி திட்ட வெப்ப அழுத்தத்தில் கரிமத்தின் மிகவும் நிலையான வடிவமாகும். எனவே வெப்பவேதியியலில் கரிமத்தின் சேர்மங்களின் உருவாக்கத்திற்கான வெப்பத்தை வரையறுக்க கடுங்கரி சீர்தர நிலையாக கொள்ளப்படுகிறது. கடுங்கரியை அன்த்ராசைட்டுக்கும் மேலான, மிக உயர்நிலை நிலக்கரியாகக் கருதலாம்; இருப்பினும் தீமூட்ட கடினமாதலால் பொதுவாக எரிபொருளாக பயன்படுத்துவதில்லை.
கடுங்கரி இயற்கையில் மூன்று முதன்மையான விதங்களில் கிடைக்கிறது:
- படிக நுண்தகட்டு கடுங்கரி (அல்லது தகட்டுப்படிவ கடுங்கரி) தனியாக, தட்டை, உடைபடாதபோது அறுகோண முனைகளுடன் தட்டு-போன்ற துகள்கள் , உடைபட்டிருந்தால் முனைகள் தாறுமாறாக அல்லது கோணலாக;
- படிகமற்ற கடுங்கரி நுண்துகள்களாக, நிலக்கரியின் வளருருமாற்றமாக,
- திரள் கடுங்கரி (அல்லது விரிசல்நார் கடுங்கரி) பிளவுகளில் நாராக, பாறைகளூடே திரளான நார் உள்வளர்ச்சி போல
மிக ஒழுங்கான செயற்கை கடுங்கரி (HOPG) என்பது கடுங்கரியின் இரு தகடுகளுக்கிடையே 1°க்கும் குறைவான கோணம் கொண்டவை ஆகும். இத்தகைய மிக உயர்தர செயற்கை வடிவம் அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.[5]
பொருளடக்கம் |
இருப்பு [தொகு]
உருமாற்றங்களின் போது படிந்துள்ள கரிமத்தின் சேர்மங்கள் வேதியியல் குறைத்தலால் உருமாறிய பாறைகளில் கடுங்கரி உருவாகிறது. இது தீப்பாறைகளிலும் விண்வீழ்கற்களிலும் கூட இருக்கின்றது.[3] கடுங்கரியுடன் தொடர்புடைய கனிமங்கள் குவார்ட்சு, கால்சைட், மைக்கா மற்றும் டர்மோலைன். விண்வீழ்கற்களில் டிரோய்லைட் மற்றும் சிலிகேட் கனிமங்களுடன் கிடைக்கின்றது.[3]
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையின்படி 2008இல் உலகெங்கும் 1,100 ஆயிரம் டன் கடுங்கரி உற்பத்தி செய்யப்பட்டது. சீனா (800 கிலோ டன்), இந்தியா (130 கிலோடன்),பிரேசில் (76 கிலோ டன்), வடகொரியா (30 கிலோ டன்) மற்றும் கனடா (28 கிலோ டன்) ஆகிய நாடுகள் முதன்மை ஏற்றுமதியாளர்களாக இருந்தன. ஐக்கிய அமெரிக்காவில் கடுங்கரி இயற்கையாக கிடைக்காவிடினும் 2007இல் செயற்கை கடுங்கரி 198 கிலோ டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.[6]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Graphite at Mindat".
- ↑ "Webmineral".
- ↑ 3.0 3.1 3.2 Handbook of Mineralogy
- ↑ Henry George Liddell and Robert Scott (1940). "γράφω". A Greek-English Lexicon. Oxford: Clarendon Press. http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgra%2Ffw.
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "highly oriented pyrolytic graphite". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ "Graphite Statistics and Information". USGS. பார்த்த நாள் 2009-09-09.
மேலும் படிக்க [தொகு]
- C.Michael Hogan, Marc Papineau et al. (December 18, 1989) Phase I Environmental Site Assessment, Asbury Graphite Mill, 2426-2500 Kirkham Street, Oakland, California, Earth Metrics report 10292.001. (Report).
- Klein, Cornelis and Cornelius S. Hurlbut, Jr. (1985). Manual of Mineralogy: after Dana (20th ed.). ISBN 0-471-80580-7.
- Taylor, Harold A. (2000). Graphite. Financial Times Executive Commodity Reports. London: Mining Journal Books ltd.. ISBN 1-84083-332-7.
- Taylor, Harold A. (2005). Graphite. Industrial Minerals and Rocks (7th ed.). Littleton, CO: AIME-Society of Mining Engineers. ISBN 0-87335-233-5.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் கடுங்கரி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |