கடவுள் அஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடவுள் அஞ்சி என்பவன் ஒரு சங்ககால அரசன். இவன் வானத்தில் தொங்கும்படி கதவம் அமைத்துக் கோட்டை கட்டியிருந்தான். இதனைத் தூங்கெயில் கதவம் என்றனர். இதில் ஏராளமான செல்வம் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இந்தச் செல்வம் வண்டன் என்பவனுடையது.

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். [1]

சான்று[தொகு]

  1. கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
    தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
    எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்
    வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து
    வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
    வண்டன் - காப்பியாற்றுக் காப்பியனார் - பதிற்றுப்பத்து 31
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுள்_அஞ்சி&oldid=2019125" இலிருந்து மீள்விக்கப்பட்டது