கடல் அலை ஆற்றல்
கடல் அலையில் உள்ள ஆற்றல் கடல் அலை ஆற்றல் எனப்படுகிறது. இவ்வாற்றல் எடுத்துக்காட்டாக மின் உற்பத்தி, உப்பகற்றல், நீர்ப்பாய்ச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடலலை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகையைச் சேர்ந்தது. கடல் அலையின் மூலம் பெறக்கூடிய ஆற்றல் அதன் உயரம், வேகம் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும்.
கடலில் இருந்து பெறப்படும் வற்றுப் பெருக்கு, கடல் ஓட்டம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் ஆற்றல் வகைகள் கடலலை ஆற்றலிருந்து வேறுபட்டவையாகும். கடலலை ஆற்றல் இன்று பெருமளவில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் 1890 களிலிருதே அதன் பயன்பாடு காணப்படுகிறது.[1] இலகின் முதல் வணிக அலைப் பன்னை போர்த்துகல்]]லில் அமைந்துள்ளது.[2] இப்பன்னை 750 கிலோவட் திறனைக் கொண்டது.[3]
கடல் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் வீசும் காற்றினால் கடலில் அலை ஏற்படுத்தப்படுகிறது. கடல் அலைக்கு சற்று மேலாக வீசும் காற்றைவிட கடல் அலை மெதுவாக பயணிக்கும் வரையிலும் காற்றிலிருந்து கடல அலைக்கு ஆற்றல் மாற்றப்படுகிறது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Christine Miller (August 2004). "Wave and Tidal Energy Experiments in San Francisco and Santa Cruz". பார்த்த நாள் 2008-08-16.
- ↑ Emily Ford. "Wave power scientist enthused by green energy". The Times. http://www.timesonline.co.uk/tol/life_and_style/career_and_jobs/careers_in/careers_in_science/article4111684.ece. Retrieved 2008-10-15.
- ↑ Alok Jha (25 September 2008). "Making waves: UK firm harnesses power of the sea ... in Portugal". The Guardian. http://www.guardian.co.uk/technology/2008/sep/25/greentech.alternativeenergy. Retrieved 2008-10-09.