கடக்வாஸ்லா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடக்வாஸ்லா அணை
அதிகாரபூர்வ பெயர் கடக்வாஸ்லா அணை
உருவாக்கும் ஆறு முடா ஆறு
உருவாக்குவது கடக்வாஸ்லா ஏரி
அமைவிடம் கடக்வாஸ்லா கிராமம், புனே, மகாராட்டிரம்
இந்தியா
நீளம் 1,939 m (6,362 ft)
உயரம் 31.79 m (104.3 ft)
திறப்பு நாள் 1880
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 86,000.00 km3 (20,632.50 cu mi)
மேற்பரப்பு 14,800.00 km2 (5,714.31 sq mi)

கடக்வாஸ்லா அணை(மராத்தி:खडकवासला, English:Khadakwasla) இந்தியா மகாராட்டிரம் புனேவிற்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அணையாகும். புனேவின் நீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று. இதனருகே பல் மருத்துவ மையமும், கால்நடை மருத்துவமனையும், தேசிய பாதுகாப்பு பயிற்சிப்பள்ளியும், மத்திய நீர் மற்றும் மின்சார ஆய்வு நிலையமும்(Central Water & Power Research Station) உள்ளது[1]. சிறிது தொலைவில் சிங்க்காட் கோட்டையும், பான்ஷெத் மற்றும் வாரஸ்காவ் இரட்டை அணைகளும் உள்ளன.1961ல் பான்ஷெத் அணை உடைந்தபோது இவ்வணையும் உடைந்ததால், 1879ல் மீண்டும் கட்டப்பட்டது. இவ்வணை முதன்முதலில் 1880ல் கட்டிமுடிக்கப்பட்டது. மயில் கூடம், குட்ஜே கிராமம், நீலகண்டேஸ்வரர் போன்ற சுற்றுலா தளங்கள் இருப்பதால் மழைக் காலங்களில் மக்கள் அதிகம் இங்கு வருகிறார்கள்.

கடக்வாஸ்லா அணை

சிறப்புகள்[தொகு]

இந்த அணை 32.90 m (107.9 ft) உயரமும் 1,539.00 m (5,049.21 ft) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 1,170.00 km3 (280.70 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு86,000.00 km3 (20,632.50 cu mi) ஆகும்[2]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கடக்வாஸ்லா_அணை&oldid=1367581" இருந்து மீள்விக்கப்பட்டது