கச்சிராயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கச்சிராயர்கள் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் அருகே ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள். 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர்கள் பல்லவர்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் என சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.[1]

திருக்கோளிலிக் கோயில் எனப்படும் திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில் சோழவளநாட்டு வெண்டாழை வேளுர்க் கூற்றத்திலுள்ள குலோத்துங்க சோழ கச்சிராயர் என்பவர் நாள் ஒன்றிற்கு எண்ணெய் உழக்காக நுறு காசை தந்துள்ளார்.[2]

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டம் படைவீட்டில்‌ உள்ள இராசகம்பீர மலையில்‌ அமைந்துள்ள சம்புவராயர்‌ காலத்து நெற்களஞ்சியத்திற்கு மேற்குப்‌ பக்கத்தில்‌ சுனைக்கு வடக்கில்‌, பாறையில்‌ வெட்டப்பட்டக்‌ 15ம்‌ நூற்றாண்டு கல்வெட்டில் திருக்கோவல்லூர்‌ தெய்வராக்‌ கச்சிராயர்‌ குமாரர்‌ உலகளந்த கச்சிராயர்‌கோட்டைக்குச்‌ சுற்று மதில்‌ அமைத்துக்‌ கொடுத்தமை பற்றி குறிப்படப்பட்டுள்ளது.[3]

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் கல்வெட்டில் விளந்தையைத்‌ தலைநகராகக்‌ கொண்டு ஆட்சி செய்த சிருப்பராயர்க்‌ கச்சிராயர்‌ என்ற சிற்றரசர்‌ திருப்புறம்பியமுடைய நாயனார்‌ கோயிலுக்குக்‌ காலைச்‌ சந்தியில்‌ அபிஷேகத்திற்கும்‌ திருவமுதுக்கும்‌ திருநாமத்துக்காணியாக நிலம்‌ வழங்கினார்.[4]

விஜயநகர பேரரசின் நாயக்கர் ஆட்சி காலத்தில் அக்கலராசா என்ற படைத்தளபதி இராமேஸ்வரம் செல்லும்பொழுது நார்த்தாமலை பகுதியில் இருந்த விசெங்கி நாட்டுக் கள்ளர்களை வென்று நார்த்தாமலை கோட்டையில் தங்கியிருந்துள்ளார். அப்பகுதியில் இருந்த 'அக்கச்சி பல்லவராயர்' என்பவர் கச்சிராயர் என்ற பட்டமுடைய கள்ளர் வீரரிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சிராயர்கள்&oldid=3844120" இலிருந்து மீள்விக்கப்பட்டது