குசு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கசு தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குசு தீவு (Kusu Island) என்பது சிங்கப்பூரின் ஒரு தீவு. இது சிங்கப்பூரின் தென்கோடியில் அமைந்துள்ளது. சிங்கப்பூர் பெருநிலப்பரப்பில் இருந்து சுமார் 5.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவை ஆமை தீவு என்றும் அழைப்பர்.

பெயர் தோற்றம்[தொகு]

மலாய் மக்களாலும், சீன மக்களாலும் சொல்லப்படும் ஒரே கதை, முன்போருகாலத்தில் கடலில் தவித்த ஒரு மலாய் மற்றும் சீன படகொட்டிகளை காக்க ஒரு மந்திரசக்தி கொண்ட ஆமையானது இந்த தீவாக மாறியதாக சொல்லப்பட்டது. அதன் நினைவாக அந்த மலாய் காரர் ஒரு தொழுகை செய்யும் இடத்தையும் , அந்த சீனர் தாவோயிசக் கோயில் ஒன்றையும் கட்டினார்கள்.

இன்று[தொகு]

இந்தத் தீவில் 1923ஆம் ஆண்டு ஒரு சீன செல்வந்தரால் சீன கடவுள்களான டா போ கோங் மற்றும் குஆன் யின் ஆகிய இருவருக்கும் கோயில் ஒன்றை எழுப்பினார். முன்னவர் மிகவும் சக்திவாய்ந்த கடவளாக கருதப்படுகிறார். பின்னவர் குழந்தை வரம் நல்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

இங்கு இருக்கும் ஒரு சிறு குன்றின் உச்சியில் இஸ்லாமிய புனிதர்களான மூவருக்கு கல்லறை அமைந்து தொழுகை செய்யும் இடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்விடத்தை அடைய 152 படிகளை கடந்து செல்ல வேண்டும்

இந்த தீவு இயற்கையை ரசிக்க ஒரு சிறந்த இடமாகவும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசு_தீவு&oldid=3910908" இலிருந்து மீள்விக்கப்பட்டது