கங்கோத்ரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கோத்ரி உத்தராகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கிய இந்து புனிதத்தலம் ஆகும்.
கங்கோத்ரி பொதுவாக கங்கையின் பிறப்பிடமாய்க் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடம். கங்கோத்ரியில் பாகீரதி என்று அறியப்படும் கங்கை தேவப்பிரயாகையில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறாள்.
பகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலேயே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை வந்ததாகவும் அதனாலேயே பாகீரதி எனும் பெயர் உண்டானதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.