ஓசோன்
| ஓசோன் | |
|---|---|
|
மூன்றாக்சிசன், Trioxygen |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | O3 |
| மோலார் நிறை | 47.998 g·mol−1 |
| தோற்றம் | நீல நிற வளிமம் |
| அடர்த்தி | 2.144 g·L−1 (0 °C), வளிமம் |
| உருகுநிலை |
80.7 K, −192.5 °C |
| கொதிநிலை |
161.3 K, −111.9 °C |
| நீரில் கரைதிறன் | 0.105 g·100mL−1 (0 °C) |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
+142.3 kJ·mol−1 |
| Standard molar entropy S |
237.7 J·K−1.mol−1 |
| தீநிகழ்தகவு | |
| EU classification | Oxidant (O) |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறு (சேர்மம்). இது வளிம நிலையில் உள்ளது. ஆக்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope). இது ஈரணு ஆக்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. எளிதில் சிதைந்து விடும். தரைக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழல் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மாந்தர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் மூச்சு இயக்கத்திற்கு கேடு விளைவிக்கின்றது. ஆனால் நில உலகின் காற்றுமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களிக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. தொழிலங்கங்களில் ஓசோன் வளி பலவகையான பயன்பாடுகள் கொண்டுள்ளன (தூய்மைப்படுத்துவது அவற்றுள் ஒன்று).
1840 இல் கிறிசுட்டியன் பிரீடரிச் இழ்சோன்பைன் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடுத்து, அது ஒருவகையான "நாற்றம்" (ஒரு வகையான மணம்) தருவது பற்றி கிரேக்க மொழியில் உள்ள ஓசைன் என்னும் வினைச்சொல்லில் இருந்து (ozein, ὄζειν, "to smell", "மணத்தல்") ஓசோன் என்று பெயர் சூட்டினார்.[1][2]. ஆனால் மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்த வேதிப்பொருள் ஓசோன் (O3) என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865 இல் இழ்சாக் லூயி சோரெ (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை[3], இது பின்னர் இழ்சோன்பைன் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது[1][4]. ஒரு வேதிப்பொருளின் மாற்றுரு (allootrope)வாக அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும். .
இயற்பியல் பண்புகள்[தொகு]
பெரும்பாலானவர்கள் காற்றில் ஒரு மில்லியனில் 0.01 பங்கு (0.01 ppm) இருந்தாலே உணரமுடியும். மில்லியலில் 0.1 முதல் 1 பங்கு அளவு முகர நேர்ந்தால் தலைவலியும், கண் எரிச்சலும், மூச்சுக்குழல் அரிப்புணர்வும் பெறுவர்.[5] .
வெப்பநிலை -112 °செ இல் இது கரிய நீல நீர்மமாக மாறுகின்றது. இன்னும் கீழான வெப்பநிலையில் -193 °செ இல் கருமை மிக்க கத்தரிப்பூ நிறத்தில் திண்மமாக மாறுகின்றது]].[6]
ஓசோன் மென்எதிர்வ காந்தத் தன்மை (diamagnetic) கொண்டது.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]
- ↑ 1.0 1.1 Rubin, Mordecai B. (2001). "The History of Ozone. The Schönbein Period, 1839-1868" (PDF). Bull. Hist. Chem. 26 (1). http://www.scs.uiuc.edu/~mainzv/HIST/awards/OPA%20Papers/2001-Rubin.pdf. Retrieved 2008-02-28.
- ↑ "Today in Science History". பார்த்த நாள் 2006-05-10.
- ↑ Jacques-Louis Soret (1865). "Recherches sur la densité de l'ozone". Comptes rendus de l'Académie des sciences 61: 941. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3018b/f941.table.
- ↑ "Ozone FAQ". Global Change Master Directory. பார்த்த நாள் 2006-05-10.
- ↑ Nicole Folchetti, ed (2003). "22". Chemistry: The Central Science (9th Edition ed.). Pearson Education. pp. 882–883. ISBN 0-13-066997-0.
- ↑ "Oxygen". WebElements. பார்த்த நாள் 2006-09-23.