ஓவா அக்கனானையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசுட்டர் தீவுத் தலை
செய்பொருள்எரிமலைப்பாறை
அளவுஉயரம்: 2.42 மீட்டர்கள் (7.9 அடி)
உருவாக்கம்1000-1200 (c.)
இடம்ஓரொங்கோ, சடங்கு மையம், ஈசுட்டர் தீவில் செய்யப்பட்டது.
தற்போதைய இடம்காட்சிக்கூடம் 24, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்.
பதிவு1869,1005.1

ஓவா அக்கனானையா (Hoa Hakananai'a) என்பது, "மோவை" எனப்படும் ஈசுட்டர் தீவுகளைச் சேர்ந்த ஒரு சிலை. இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. "ஓவா அக்கனானையா" என்பது ராப்பா நுயி மொழிச் சொல். இது "திருடப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நண்பன்"[1] அல்லது "முதன்மை அலை தடுப்பு"[2] என்னும் பொருள் கொண்டது. எச்.எம்.எசு டொப்பாசு என்னும் ஆங்கிலக் கப்பல் பணியாளர்கள் 1868 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி[3] ஈசுட்டர் தீவுகளில் உள்ள ஓரொங்கோ என்னும் இடத்தில் இருந்து இதனை எடுத்துக்கொண்டு[4] 1869 ஆகத்து 25 ஆம் தேதி போர்ட்சுமவுத்தை வந்தடைந்தனர்.[5]

விவரங்கள்[தொகு]

பெரும்பாலான "மோவை"கள் இலகுவாகச் செதுக்கக்கூடிய எரிமலைச் சாம்பற் பாறையில் செய்யப்பட்டவை. 16 "மோவை"கள் மட்டுமே கடினமான எரிமலைப் பாறைகளில் செய்யப்பட்டுள்ளன.[6] முன் புறத்தில் இருந்து பின்புறம் வரை இதன் அளவு 55 சமீ.[6] 2.42 மீட்டர்கள் உயரம் கொண்ட இதன் நிறை ஏறத்தாழ 4 தொன்கள்.[7]

"ஓவா அக்கனானையா" மனிதரின் முண்டப்பகுதி, தலை என்பவற்றுடன் சுருங்கிச் சிறுத்த கைகளையும் கொண்டது. இதன் தலைக்கும் முண்டத்துக்குமான அளவு விகிதம் 3:5. இது "மோவை"களில் வழக்கமான அளவுமீறிப் பெருத்த தலையைக் குறிக்கின்றது. தற்போது வெறுமையாக இருக்கும் கண் குழிகளில் முன்னர் பவளப்பாறை அல்லது எரிமலைக் கண்ணாடியினாலான கண்கள் இருந்திருக்கக்கூடும். உடல் சிவப்பு, வெள்ளை நிறங்கள் தீட்டப்பட்டு இருந்தது. ஆனால், இதனை தீவில் இருந்து எடுத்து வரும்போது அகற்றப்பட்டுவிட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Van Tilburg, J. A. Hoa Hakananai'a (British Museum Press 2004), p.38
  2. "RapaNui Sprache - Übersetzung Buchstabe N". Archived from the original on 2012-07-09. பார்க்கப்பட்ட நாள் 2012-07-14.
  3. Van Tilburg, J. A. Hoa Hakananai'a (British Museum Press 2004), p.
  4. Van Tilburg, Jo Anne. (2006). Remote Possibilities: Hoa Hakananai'a and HMS Topaze on Rapa Nui. British Museum Research Papers. ISBN 0-86159-158-5.
  5. Van Tilburg, J. A. Hoa Hakananai'a (British Museum Press 2004), p.7
  6. 6.0 6.1 Van Tilburg, J. A. Hoa Hakananai'a (British Museum Press 2004), p.45
  7. British Museum.org. Hoa Hakananai'a: Stolen or Hidden Friend. Retrieved: 09.02.2008.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவா_அக்கனானையா&oldid=3547214" இலிருந்து மீள்விக்கப்பட்டது