ஓர்முசு நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இப் பகுதியின் நிலப்படம்(1892)
ஹோர்முஸ் நீரிணை, நிலப்படம்
செய்மதிப் படம்

ஓர்முசு நீரிணை (ஹோர்முஸ் நீரிணை, Straits of Hormuz) தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன.

இந் நீரிணையின் மிக ஒடுங்கிய பகுதி 21 மைல்கள் அகலம் கொண்டது. இதிலே, ஒன்றிலிருந்து ஒன்று 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள, ஒவ்வொன்றும் ஒரு மைல் அகலம் கொண்ட, இரண்டு கால்வாய்கள் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இதுவே. உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20% இந் நீரிணையூடாகவே கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும்.

2012ல் ஈரான் அணு உலைக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களை மறிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது, அதனைத் தொடர்ந்து இவ்வழியே ஏற்றுமதியாகும் எண்ணெய் வியாபாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்முசு_நீரிணை&oldid=1076611" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்