ஓயாசிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓயாசிஸ் உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். இது பின்லாந்து நாட்டில் உள்ள தூர்கு தளத்தில் கட்டப்பட்டது. 360 மீட்டர் நீளமும் 16 அடுக்கு மாடிகளையும் கொண்டது. 2700 அறைகளை கொண்டுள்ளது. இதில் ஓரே சமத்தில் 6,300 பேர் பயணம் செய்யலாம். 2100 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றனர். இது ரூ.7500 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில், 4 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப் ந்து, விளையாட்டு மைதானங் களும் உள்ளன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்க கூடிய பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளன.
கோல்ப் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது.