ஓம் (மின்னியல்)
[1] ஓம் (ஆங்கிலம்: Ohm) என்பது தடையை அளப்பதற்கான சர்வதேச அலகு ஆகும்.[2] இதனுடைய குறியீடு Ω ஆகும்.[3] இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[4]
பொருளடக்கம் |
வரைவிலக்கணம் [தொகு]
கடத்தியொன்றில் இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு ஒரு வோல்ட்டு ஆகவும் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓர் அம்பியர் ஆகவும் இருப்பின், அக்கடத்தியின் தடை ஓர் ஓம் ஆகும்.[5]
இலத்திரனியல் ஆவணங்களில் Ω குறியீடு [தொகு]
இலத்திரனியல் ஆவணங்களில் (மீப்பாடக் குறிமொழி உள்ளடங்கலாக) Ω குறியீட்டினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் அவசியமாகும். சில மென்பொருட்களில் எழுத்துரு ஆதரவு அளிக்காத நிலையில் Ω குறியீடானது, W என்ற குறியீட்டின் மூலம் காட்டப்படும். உதாரணமாக, 100 Ω தடையி என்பதற்குப் பதிலாக 100 W தடையி என்று காட்டப்படும். [சான்று தேவை]
ஒருங்குறியில் Ω குறியீட்டிற்கு U+2126 என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.[7]
)