ஓமி பாபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
| ஓமி யெகாங்கிர் பாபா | |
|---|---|
ஓமி யெகாங்கிர் பாபா (1909-1966) |
|
| பிறப்பு | அக்டோபர் 30, 1909 |
| பிறப்பிடம் | மும்பை, இந்தியா |
| இறப்பு | சனவரி 24 1966 (அகவை 56) |
| இறப்பிடம் | மோண்ட் பிளாங்க், பிரான்சு |
| வாழிடம் | இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| இனம் | பார்சி |
| கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச் பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | பாபா சிதறல், அண்டக்கதிர் ஆராய்ச்சி |
| மதம் | சரத்துஸ்திர சமயம் |
ஓமி யெகாங்கிர் பாபா (Homi Jehangir Bhabha, இந்தி: होमी भाभा, அக்டோபர் 30, 1909 - சனவரி 24, 1966), இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். இவரை இந்திய அணுக்கருவியலின் தந்தை என அழைப்பர்.
பிறப்பு [தொகு]
- ஹோமி ஒரு செல்வச்செழிப்பு மிக்க பார்சி (பெருசிய) குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
- பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை இங்கிலாந்திற்கு அனுப்பினார். ஓமியும் சென்றார் -- ஆனால் கற்றதோ இயற்பியலை !
- அங்கு இருக்கையில் பல பதக்கங்களையும் உதவித்தொகைகளையும் பாபா பெற்றார். அதைவிட சிறப்பு - அவர் என்ரிகோ ஃபெருமி, வூல்வுகாங் பவுலி ஆகிய தலைசிற்ந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றியது.
அண்டக்கதிர்கள் பற்றிய ஆராய்ச்சி - அயல் நாட்டில் [தொகு]
- அண்டக்கதிர்கள் இயற்பியலாளர்களுக்கே ஒரு புரியாத புதிராக இருந்தன (இருக்கின்றன); அவற்றின் மூலம், அவற்றிலுள்ள துகள்கள், துகள்களின் தோற்றம், இன்னும் பலப்பல விடயங்கள்.
- 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.
- அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் மீசான் எனப்படும் அடிப்படைத் துகள் ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்திற்கான ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது.