ஓ. பன்னீர்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒ. பன்னீர் செல்வம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓ. பன்னீர்செல்வம்
02ஆவது தமிழக துணை முதலமைச்சர்
பதவியில்
21 ஆகத்து 2017 – 6 மே 2021
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு)
பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர்எடப்பாடி க. பழனிசாமி
முன்னையவர்மு. க. ஸ்டாலின்
07-வது தமிழக முதலமைச்சர்
பதவியில்
06 திசம்பர் 2016 – 15 பிப்ரவரி 2017
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு)
முன்னையவர்ஜெ. ஜெயலலிதா
பின்னவர்எடப்பாடி க. பழனிசாமி
பதவியில்
28 செப்டம்பர் 2014 – 23 மே 2015
ஆளுநர்கொனியேட்டி ரோசையா
முன்னையவர்ஜெ. ஜெயலலிதா
பின்னவர்ஜெ. ஜெயலலிதா
பதவியில்
21 செப்டம்பர் 2001 – 2 மார்ச் 2002
ஆளுநர்சக்ரவர்த்தி ரங்கராஜன் (கூடுதல் பொறுப்பு),
பி.எஸ். ராம்மோகன் ராவ்
முன்னையவர்ஜெ. ஜெயலலிதா
பின்னவர்ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
19 மே 2006 – 28 மே 2006
முன்னையவர்க. அன்பழகன்
பின்னவர்ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2011
முன்னையவர்எஸ். லட்சுமணன்
தொகுதிபோடிநாயக்கனூர்
பதவியில்
14 மே 2001 – 15 மே 2011
முன்னையவர்எல். மூக்கையா
பின்னவர்ஏ. லாசர்
தொகுதிபெரியகுளம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்
பதவியில்
21 ஆகத்து 2017 – 23 ஜூன் 2022
Deputyகா. பூ. முனுசாமி
ஆர். வைத்திலிங்கம்
இணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி க. பழனிசாமி
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
பதவியில்
21 ஆகத்து 2017 – 11 ஜூலை 2022
முன்னையவர்திண்டுக்கல் சீனிவாசன்
பின்னவர்திண்டுக்கல் சீனிவாசன்
பதவியில்
28 ஆகத்து 2007 – 14 பிப்ரவரி 2017
நியமித்தவர்ஜெ. ஜெயலலிதா
முன்னையவர்டி. டி. வி. தினகரன்
பின்னவர்திண்டுக்கல் சீனிவாசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சனவரி 1951 (1951-01-14) (அகவை 73)[1]
பெரியகுளம், மதராசு மாநிலம், இந்தியா
(தற்போது தமிழ்நாடு)
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்ப. விஜயலட்சுமி (இ:2021)
பிள்ளைகள்3 (இரவீந்திரநாத் குமார் உட்பட)
பெற்றோர்(s)தந்தை: ஓட்டக்கார தேவர்
தாய்: பழனியம்மாள் நாச்சியார்
வாழிடம்(s)31, ராஜ அண்ணாமலைபுரம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
விருதுகள்International Rising Star of the Year-Asia (2019)
புனைப்பெயர்(s)ஓ. பி. எஸ், பெரியகுளத்தார்

ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம் (ஆங்கில மொழி: O.Panneer Selvam, பிறப்பு: ஜனவரி 14 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 6ஆவது முதலமைச்சராகவும், 2ஆவது துணை முதலமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவரும் ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார்.

இவர் 21 செப்டம்பர் 2001 - 02 மார்ச் 2002, 28 செப்டம்பர் 2014 - 23 மே 2015 மற்றும் 05 திசம்பர் 2016 - 15 பிப்ரவரி 2017 என மூன்று முறை தமிழக முதலமைச்சராகவும் 21 ஆகத்து 2017 - 6 மே 2021 வரை தமிழக துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தேனி மாவட்டம், பெரியகுளம் எனும் ஊரில் ஓட்டக்கார தேவர் மற்றும் பழனியம்மாள் நாச்சியார் ஆகியோருக்கு ஜனவரி 14, 1951 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் இறுதிவகுப்பில் தேறினார். பின்னர் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் படித்து இளங்கலை (பி. ஏ) பட்டம் பெற்றார். இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும், இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும்[2] ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு ராஜா என்ற தம்பியும் உள்ளார்.[2] இவரது மூத்த மகன் இரவீந்திரநாத் குமார், 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் (2017–2022)

2017 ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் துணை முதல்வராகவும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். 11 சூலை 2022 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி, மேனாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,[3] மேனாள் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், பி. எச். மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே. சி. டி. பிரபாகர் ஆகியோரை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்"கழக விரோத" நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்டனர்.[4]

23 பிப்ரவரி 2023 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் 11 சூலை 2022 அன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவுகளை உறுதிசெய்தது மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

28 மார்ச் 2023 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது மற்றும் 11 சூலை 2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது. அதே நாளில், எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் மூலம் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 ஏப்ரல் 2023 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி கே. பழனிசாமியை கழகப் பொதுச் செயலாளராக அங்கீகரித்தது, கழக அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டது.

சட்டமன்றப் பங்களிப்புகள்

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்காவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பணியாற்றி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு தேர்தல்

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு தேர்தல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • 19 மே 2006 முதல் 28 மே 2006 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும்,
  • 29 மே 2006 முதல் 14 மே 2011 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராாகவும் பணியாற்றினார்.

2011 ஆம் ஆண்டு தேர்தல்

2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.
  • தமிழ்நாடு முதலமைச்சர் (செப்டம்பர் 27, 2014மே 22, 2015)
  • நிதி அமைச்சர் (மே 23, 2015மே 22, 2016)

2016 ஆம் ஆண்டு தேர்தல்

2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 சட்டமன்றத் தேர்தல்

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகி,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரனார்.[5]

தமிழக முதல்வராக

முதல் முறை

டான்சி வழக்கினாலும்,பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கினாலும் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால், வி.கே.சசிகலாவின் பரிந்துரைப்படி இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 01-ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

இரண்டாம் முறை

27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.[6] சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மூன்றாவது முறை

05 டிசம்பர் 2016 அன்று முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, பன்னீர் செல்வம் 06 திசம்பர் 2016 அன்று அதிகாலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.[7]

அதிமுகவின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 05 பிப்ரவரி 2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[8] பின்னர் 07 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம்,கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதன் பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 07 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 08 மக்களவை உறுப்பினர்கள், 02 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

தமிழக துணை முதல்வராக

முதல் முறை

அதிமுகவின் இபிஎஸ் அணியும்,ஓபிஎஸ் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது., அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். 6 மே 2021 வரை அப்பதவியில் இருந்தார்.[9]

படங்கள்

போட்டியிட்ட தேர்தல்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் % எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் %
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 பெரியகுளம் அதிமுக வெற்றி 54.28% எம்.அபுதாஹிர் திமுக 38.62%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 பெரியகுளம் அதிமுக வெற்றி 49.81% எல். மூக்கையா திமுக 39.00%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 போடிநாயக்கனூர் அதிமுக வெற்றி 56.69% எஸ். லட்சுமணன் திமுக 38.89%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 போடிநாயக்கனூர் அதிமுக வெற்றி 49.38% எஸ். லட்சுமணன் திமுக 41.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 போடிநாயக்கனூர் அதிமுக வெற்றி 46.68% தங்க தமிழ்ச்செல்வன் திமுக 41.45%

சொத்துக்குவிப்பு வழக்கில்

2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலெட்சுமி, மகன்கள் இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தம்பி ஓ. ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ. பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்குக் குவித்தாக தேனி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2007ல் வழக்கு பதிவு செய்தது. 2012ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், இலஞ்ச ஒழிப்புத் துறையினர், இவ்வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என்பதால், புகாரை திரும்ப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிர்த்தது. இதனால் ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து விடுவித்தது.

சிவகங்கை மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இலஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.[10][11][12][13]

மேற்கோள்கள்

  1. "Thiru O. Panneerselvam Hon'ble Deputy Chief Minister". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 4 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 ஆனந்தவிகடன் 8-8-2019
  3. "அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கம்: பொதுக் குழுவில் சிறப்பு தீர்மானம்". indianexpress tamil. 11 July 2022. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  4. "அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம்!". news18 tamil. 11 July 2022. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  5. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  6. தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்
  7. "Panneerselvam sworn in as Tamil Nadu Chief Minister for third time". தி இந்து. 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. "தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா". தி இந்து (தமிழ்). 6 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. "அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை". செய்தி. தி இந்து. 22 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017.
  10. Madras HC to review 2012 discharge of OPS in corruption case
  11. சொத்துக் குவிப்பு வழக்கில் ஓபிஎஸ் விடுதலை விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
  12. ஓ.பி.எஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு; ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை
  13. ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை-

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாட்டு முதலமைச்சர்
2001–2002
பின்னர்
ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாட்டு முதலமைச்சர்
2014–2015
தமிழ்நாட்டு முதலமைச்சர்
டிசம்பர் 6, 2016 - பெப்ரவரி 16, 2017
பின்னர்
எடப்பாடி க. பழனிசாமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._பன்னீர்செல்வம்&oldid=3928408" இலிருந்து மீள்விக்கப்பட்டது